பழைய வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் ரூ.3,500-லிருந்து ரூ.25,000 ஆக உயர்வு : மத்திய அரசு அறிவிப்பு!

vehicle
vehicle
Published on

20 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்கான தகுதி சான்றிதழ் கட்டணம் உயர்வினை மத்திய அரசு அதிகரித்துள்ளது.இது தொடர்பான அதிரடி அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த புதிய அறிவிப்பின்படி பழைய வாகனங்களுக்கான தகுதி சான்றிதழ் கட்டணத்தில் மத்திய சாலை போக்குவரத்து கழகம் அமைச்சகம் சமீபத்தில் மாற்றம் செய்து உயர்த்தி உள்ளது. பழைய வாகனங்களுக்கான பதிவைப் புதுப்பிக்கும் கட்டணத்தை மத்திய அரசு ஏற்கெனவே உயர்த்தியிருந்தது. அது நடைமுறைக்கு வந்து சில மாதங்களுக்குள்ளாகவே, தற்போது 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்பட்டு வரும் பழைய வாகனங்களுக்கான தகுதி சான்றிதழ் கட்டணத்தையும் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உயர்த்தியுள்ளது.

பொதுமக்கள் தொடர்ந்து பழைய வாகனங்களை பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கிலும்,குறைக்கும் நோக்கிலும் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் தகுதி சான்றிதழ் பரிசோதனைக்கு உட்படும் கட்டணங்கள் வாகனங்களின் வயதை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் படி,10 முதல் 15 ஆண்டுகள், 15 முதல் 20 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகளுக்கு மேலென மூன்று பிரிவுகளாக வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதில் 20 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்படும் பழைய வாகனங்களுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், கனரக சரக்கு லாரிகள் மற்றும் பேருந்துகளுக்கான தகுதி சான்றிதழ் கட்டணம் ரூபாய் 3500யிலிருந்து ரூபாய் 25,000 ஆகவும் நடுத்தர வாகனங்களுக்கு ரூபாய் 20,000 ஆகமாகவும், கார் போன்ற இலகுரக மோட்டார் வாகனங்களுக்கு 10,000த்திலிருந்து 15,000 ரூபாயாகவும், இருசக்கர வாகனங்களுக்கு ரூபாய் 600 லிருந்து ரூபாய் 2000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் மாதத்தில் மத்திய போக்குவரத்து அமைச்சகம் பழைய வாகனங்களுக்கான பதிவுக் கட்டணங்களையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையொட்டி டில்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பழைய டீசல் வாகனங்களை பயன்படுத்தி வரும் உரிமையாளர்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பழைய பெட்ரோல் வாகனங்களை பயன்படுத்தி வரும் உரிமையாளர்கள் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எதையும் அரசு எடுக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
அமரன் திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்: கோவா சென்றார் நடிகர் சிவகார்த்திகேயன்..!
vehicle

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com