முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை தள்ளி வைத்தது TRB!

Exam Date
TRB Exam
Published on

தமிழ்நாட்டில் அரசு வேலையை் பெறவேண்டும் என இலட்சக்கணக்கான இளைஞர்கள் TNPSC மற்றும் TRB உள்ளிட்ட தேர்வுகளை எழுதி வருகின்றனர். இதில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான TRB தேர்வு குறித்த விவரங்கள் நேற்று முன்தினம் (10-07-2025) வெளியானது.

இதன்படி 1,996 காலியிடங்களுக்கான முதுநிலை ஆசிரியர் பணிக்கு ஆகஸ்ட் 12 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. மேலும் வருகின்ற செப்டம்பர் 28 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் அறிவிப்பு வெளியானது.

அறிவிப்பு வெளியான இரண்டே நாட்களில் தற்போது தேர்வுக்கான தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் எஸ்.ஜெயந்தி வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “வருகின்ற செப்டம்பர் 28 ஆம் தேதி TNPSC குரூப்2 முதல்நிலைத் தேர்வு நடைபெற இருக்கிறது. அதே தேதியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வும் நடைபெறும் என கடந்த ஜூலை 10 ஆம் தேதி வெளியானது. இந்நிலையில், இரு தேர்வுகளும் ஒரே நாளில் நடைபெற்றால் அது விண்ணப்பதாரர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதைக் கருத்தில் கொண்டு, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான தேதியை ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து பின்னர் அறிவிக்கப்படும்” என்று அவர் கூறினார்.

முதுகலை ஆசிரியர் தேர்வு தேதியில் மட்டுமே தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதியில் எவ்வித மாற்றுமும் இல்லை. விண்ணப்பதாரர்கள் https://trb.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி வரைக் காத்திருக்காமல் விரைந்து விண்ணப்பக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
Exam Date

முதுநிலை ஆசிரியர் தேர்வு அறிவிப்பு தொடர்பாக விண்ணப்பதாரர்களுக்கு ஏதேனும் கோரிக்கைகள் இருந்தால், trbgrievances@tn.gov.in என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் ஏற்கனவே மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

புதிய பாடத்திட்டத்தின் படி முதன்மைப் பாடத்தில் 110 வினாக்களும், கல்வி உளவியல் பிரிவில் 30 வினாக்களும் மற்றும் பொது அறிவு பிரிவில் 10 வினாக்களும் என மொத்தம் 150 வினாக்கள் கேட்கப்படும்.

இதையும் படியுங்கள்:
வேலை இழப்புக் காப்பீடு யாருக்கெல்லாம் பயன்படும்?
Exam Date

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com