
நிறுவனம் : மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (DCPU)
வகை : தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் : 06
பணியிடம் : திருச்சி, தமிழ்நாடு
ஆரம்ப நாள் : 10.09.2025
கடைசி நாள் : 24.09.2025
1. பதவி: வழக்குப் பணியாளர்
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலியிடங்கள்: 03
கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகவல் தொடர்பு திறன் இருத்தல் வேண்டும்.
2. பதவி: மேற்பார்வையாளர்
சம்பளம்: மாதம் Rs.21,000/-
காலியிடங்கள்: 03
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூக பணி/ கணினி அறிவியல்/ தகவல் தொழில்நுட்பம்/ சமூகம் சார்ந்த சமூகவியல்/ சமூக அறிவியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் மற்றும் கணினியில் திறமை பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 42 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.09.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.09.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தினை https://tiruchirappalli.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, முதல் தளம், மெக்டொனால்ட் ரோடு, கலையரங்கம் வளாகம், திருச்சிராப்பள்ளி – 620 001.