திருப்பதியில் திரிஷா தரிசனம்.. நேராக விஜய் வீட்டிற்கு பயணம் - வைரல் வீடியோ..!

TRISHA IN VIJAY HUS
TRISHA IN VIJAY HUS
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

நடிகை திரிஷா தனது 43வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்பு அங்கிருந்து நேராக சென்னையில் உள்ள விஜயின் நீலாங்கரை வீட்டிற்கு சென்றுள்ளார். தேர்தல் முடிவுகளில் விஜய் கட்சி முன்னிலை வகிக்கும் பரபரப்பான சூழலில் திரிஷா சிரித்த முகத்துடன் அவர் வீட்டிற்கு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக சட்டசபை தேர்தலில் தவெக முன்னிலை வகித்து வரும் நிலையில் விஜயின் நீலாங்கரை வீட்டிற்கு திரிஷா சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அவருடைய 43வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்றிரவு திருப்பதிக்கு சென்று இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டார். அவர் ஏழுமலையானை தரிசனம் செய்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. திரிஷாவுக்கு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் முடிவுகள் வெளியாகும் இந்த நாளில் அவர் சாமி தரிசனம் செய்தது தவெகவின் வெற்றிக்காக இருக்குமோ என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றார்கள்.

ஏற்கனவே திரிஷா தேர்தல் அன்று வாக்களித்ததை பற்றி கேள்வி எழுப்பிய பொழுது, விஜயுடன் நடித்திருந்த கில்லி பாடலுடன் பதிவு ஒன்றைப் போட்டு, தான் விஜய்க்கே ஓட்டளித்ததாக வெளிப்படையாக சொல்லி இருந்தார். இந்நிலையில் அவர் தன் பிறந்த நாளுக்காக மட்டுமல்லாமல் விஜயின் அரசியல் வெற்றிக்காகவும் வேண்டிக்கொண்டு சாமி தரிசனம் செய்ததாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

தேர்தலில் தவெக தலைவர் விஜய் முன்னிலை வகுத்து வரும் நிலையில் அவருடைய நீலாங்கரை வீட்டில் கட்சித் தொண்டர்கள் சூழ்ந்து கொண்டுள்ளனர். போலீஸ் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ரேஞ்ச் ரோவர் காரில் வந்த நடிகை திரிஷா விஜயின் நீலாங்கரை வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், விஜயின் 'தமிழக வெற்றிக்கழகம் கட்சி' முன்னிலை வகிக்கும் இந்த நேரத்தில் திரிஷா விஜயை நேரில் சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்:
#BIG BREAKING: கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோல்வி..!!
TRISHA IN VIJAY HUS
logo
Kalki Online
kalkionline.com