#BIG NEWS : ஈரானின் பொறியியல் அதிசயத்தை தகர்த்த அமெரிக்கா; 8 பேர் உயிரிழப்பு..!!

Donald Trump
Donald Trump
Updated on

அமெரிக்க ஈரான் இடையிலான போர் நாளுக்கு நாள் தீவரமடைந்து வருகிறது . போர் தாக்குதலில் ஈரான் தலைநகர் டெஹ்ரான் மற்றும் கராஜ் நகரங்களை இணைக்கும் 136 மீட்டர் கொண்ட மிக உயரமான தொங்கு பாலம் தகர்க்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

"ஈரானின் மிகப்பெரிய பாலம் தகர்க்கப்பட்டது, இனி அதை பயன்படுத்த முடியாது" என்று அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் தெரிவித்து "இன்னும் பல நடவடிக்கைகள் தொடரும்.காலம் கடந்து போவதற்குள் ஈரான் ஒர் ஒப்பந்தத்தை எட்டு வேண்டிய தருணம் இது " எனவும் எச்சரித்துள்ளார் .

ஈரான் பொறியியல் துறையின் முக்கிய அடையாளமாக கருதப்படும் இந்தப் பாலத்தின் மீதான தாக்குதலில் 8 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஈரான் மீதான இந்த தாக்குதல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றத்தை உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த தாக்குதலை உறுதிப்படுத்திய ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி "பொதுமக்கள் பயன்பாட்டுக்கான கட்டிடங்களை முடிக்கப்படாத பாலங்களை தாக்குவது ஈரானை சரணடைய வைக்காது. அது எதிரியின் தோல்வி மற்றும் தார்மீக வீழ்ச்சியையும் தான் காட்டுகிறது. ஒவ்வொரு பாலமும் கட்டிடமும் இன்னும் வலுவாக மீண்டும் கட்டப்படும்" என டிரம்பிற்கு பதிலடியும் தந்துள்ளார்.

ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் 'கல் யுகத்திற்கு' (Stone Age) தள்ளப்படுவீர்கள் எனவும் டிரம்ப் எச்சரித்துள்ள நிலையில் ஈரானின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் எனவும் மேலும் நிலைமை மோசமாவதற்குள் விரைவில் போர் நிறுத்தம் அறிவிப்பு வருமா எனவும் உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன.

இதையும் படியுங்கள்:
#BREAKING: கட்சி அறிவிக்கும் முன்பே மனுத் தாக்கல்: பாஜக நிர்வாகி அதிரடி நீக்கம்.!
Donald Trump
logo
Kalki Online
kalkionline.com