தன்னை இயேசு கிறிஸ்துவாக சித்தரிக்கும் டிரம்ப் - கடுப்பாகும் மக்கள்..!

trump
trump
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப்,  எப்போதும் தன்னை உயர்வாக சித்தரிப்பதை வழக்கமாக வைத்திருப்பவர். அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது அவருக்கு வாடிக்கையாக உள்ளது.  சர்வதேச அளவில் ஏதேனும் ஒரு நிகழ்வு நடந்து விட்டால், அதற்கு காரணம் தான் என்று மார்தட்டிக் கொள்வது அவரது வழக்கம்.

இந்தியா பாகிஸ்தான் போரை தான் தான் நிறுத்தியதாக தினந்தோறும் ஏதேனும் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிவிடுவார். நீண்ட நாட்களாக அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு கிடைக்க வேண்டும் என்று அடிக்கடி கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தார். அவருக்கு நோபல் பரிசு கிடைக்காததால் அந்த அமைப்பினரை கடுமையாக விமர்சித்து இருந்தார். இறுதியில் தனது நண்பரான ஃபிஃபா அமைப்பு தலைவரை வைத்து, புதிதாக ஃபிஃபா அமைதி விருதை உருவாக்கி , அதைப் பெற்றுக் கொண்டார்.

ஒவ்வொரு நாளும் ட்ரம்பின் நடவடிக்கை ஒவ்வொன்றும் ஏதேனும் ஒரு சர்ச்சை கிளப்பும் வகையில் இருந்து வருகிறது. இன்று கத்தோலிக்க மதத் தலைவரான போப்பை விமர்சித்து இருந்தார். அந்த செய்தி ஓய்வதற்குள் தன்னை இயேசு கிறிஸ்துவாக சித்தரித்து ஒரு படத்தினை வெளியிட்டுள்ளார். இந்த படம் தற்போது விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.

இதையும் படியுங்கள்:
அமெரிக்கா,ஈரான் போரில் சிக்கிய 8.43 லட்சம் இந்தியர்கள்..!
trump
logo
Kalki Online
kalkionline.com