

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று இரவு எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை தமிழகம் திரும்புவதற்காக டெல்லி விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக கூட்டணியில் மீண்டும் இணைத்துக் கொள்வீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குச் சில கட்சிகள் வரும். அதை இப்போது வெளிப்படையாகச் சொல்ல முடியாது. அவர்கள் சேரும்போது செய்தியாளர்களை அழைத்து முறைப்படி அறிவிப்போம். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுக-வில் சேர வாய்ப்பு இல்லை" என்று தெரிவித்தார்.