

சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சினோரா அசோக், வால்டாக்ஸ் சாலை பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த பகுதியில் வசிக்கும் விளிம்பு நிலை மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து ஆதரவு திரட்டினார். பிரச்சாரத்தின் பொழுது மக்களுக்கு 'விசில்'களை வழங்கினார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் தனது வெற்றி சின்னமான விசில் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். தொகுதி முழுவதும் வீடு வீடாகச் சென்று விசில் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் தவெக கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.