இல்லம்தோறும் நம்ம எம்.எல்.ஏ..!- சாமான்ய குடும்பத்தை சேர்ந்தவர்களை வேட்பாளர்களாக தேர்ந்தெடுத்தது ஏன்? விஜய் விளக்கம்..!

vijay speech in chennai
vijay speech in chennai image source:minnambalam
Published on

சென்னையில் நடைபெற்ற தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் விஜய் பேசியதாவது: இந்த கூட்டத்தை வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் என்று சொன்னார்கள். வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் அல்ல; மக்களுக்கான காப்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம்.நம்ம கட்சிக்காரங்களுக்கு தேர்தல் ஃபேஸ் பண்ண எக்ஸ்பீரியன்ஸ் (Experience) எல்லாம் இல்லை அப்படின்னு சொல்லுவாங்க.. நமது வேட்பாளர்கள் எல்லோரும் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து இருக்கிறார்கள். ஒரு எம்எல்ஏ எப்படி இருக்க வேண்டும் என்று நான் சொல்கிறேன். சும்மா அனுபவத்தை வைத்து கொண்டு கொள்ளை அடிப்பவர்களாக எம்எல்ஏ இருக்க கூடாது. கேள்வி கேட்கும் ரிப்போர்டர்களை தாக்குகிறவர்களாக இருக்க கூடாது.

இன்னும் ஓப்பனா சொல்லணும்னா, இந்த திமுக-வுல இருந்து வந்த ஒரு எம்.எல்.ஏ மேல கொள்ளையடிச்ச கேஸ் இருக்குது, போதைப்பொருள் கடத்தல் கேஸ் இருக்குது, திருட்டு கேஸ் எல்லாம் இருக்குது. திருட்டு கேஸ்ல எல்லாம் ஜெயிலுக்கு போயிட்டு வந்த ஒருத்தர் இருக்கிறாரு. நீங்க கூட யோசிக்கலாம் அவர் யாருன்னு… அந்த எம்.எல்.ஏ யாருன்னு உங்களுக்கு யோசிக்கத் தோணும்.

இன்னொரு குளூ (Clue) வேணா நான் தரேன். அந்த திருட்டு கேஸ்ல உள்ள போயிட்டு வந்தவரை, யாருக்கு எதிரா இந்த திமுக தேர்தல்ல நிக்க வச்சாங்க தெரியுமா? இன்னைக்கு அவங்க கூட்டணியிலேயே மூச்சுக்கு முன்னூறு தடவை முட்டுக்கொடுக்கிற ஒரு மிகப்பெரிய தலைவருக்கு எதிரா! அந்தத் தலைவரைத் தோற்கடிக்கணும்னுதான் 1996-ல அவருக்கு ஆப்போசிட்டா (Opposite) இந்த எம்.எல்.ஏ-வை நிக்க வச்சாங்க. மரியாதை நிமித்தமா அந்தத் தலைவர் பேரை இங்க நான் சொல்ல வேணாம்னு நினைக்கிறேன்.

இப்படியெல்லாம் இருக்காங்க எம்.எல்.ஏ-க்கள், நான் லிஸ்ட் போட்டு சொன்ன மாதிரி. ஆனா எம்.எல்.ஏ-க்கள்னா சும்மா இல்லை, ஒரு தொகுதிக்கான, அந்த மக்களுக்கான எல்லைக் காப்பாளர்கள்; அப்படி இருக்கணும்.

களத்துல மக்களோட மக்களா நிக்கிற மாதிரி ஆளுங்களைத்தான் நான் செலக்ட் (Select) பண்ணிருக்கேன். நான் வந்து எல்லா இடத்துலயும் எல்லா நேரத்துலயும் ஒரே நேரத்துல நான் போய் நிக்க முடியாது இல்லையா? அதனால என் சார்பா, என்னுடைய பிரதிநிதிகளா நானே பார்த்து பார்த்து என்னுடைய வேட்பாளர்களை செலக்ட் பண்ணிருக்கேன். நம்மளோட அக்கா, நம்மளோட தங்கை, நம்மளோட அண்ணா, தம்பி அப்படின்னு சொல்லி நம்மளோட வேட்பாளர்களை செலக்ட் பண்ணி இன்னைக்கு உங்க முன்னாடி நான் ஒப்படைக்கிறேன். மக்களே, அவங்களை எம்.எல்.ஏ ஆக்க வேண்டியது உங்களுடைய பொறுப்பு.

இப்படி இந்தத் தேர்தல் இருக்குறதுனால நம்ம கட்சி வேட்பாளர்களைத் தமிழ்நாட்டோட ஒவ்வொரு சாமான்ய குடும்பத்துத் தோழர்களா இருக்குற மாதிரி தான் நான் செலக்ட் பண்ணிருக்கிறேன். நம்ம வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போடுறது நமக்கு நாமே ஓட்டுப் போடுற மாதிரி. உங்களுக்கு நீங்களே ஓட்டுப் போட்டுக்குற மாதிரி.மன்னராட்சிகிட்ட இருந்து மக்களாட்சி மீட்குறதுக்கு ஓட்டு போடுற மாதிரி. நான் வேற நம்ம வேட்பாளர்கள் வேற எல்லாம் இல்ல, நான் எப்படி உங்க வீட்ல உங்க குடும்பத்துல ஒருத்தனோ, அதே மாதிரி தான் நம்ம வேட்பாளர்களும் உங்க குடும்பத்துல இருக்கிற ஒருத்தர்.அதனால, நம்ம வேட்பாளர்களை MLA ஆக்குறது உங்க ஒவ்வொருத்தர் வீட்லயும் ஒரு MLA இருக்குற மாதிரி. இத ‘இதயத்தில் உங்கள் விஜய், இல்லம்தோறும் நம்ம MLA’ னு கூட சொல்லலாம்.

கட்சி ஆரம்பிச்சு கிட்டத்தட்ட ஒரு மூணு வருஷத்துக்கு மேல ஆச்சு. இன்னமும் ஒரு கூச்சல் சத்தம் அடங்குன மாதிரியே எனக்குத் தெரியல. “விஜய்க்கு என்னப்பா செல்வாக்கு இருக்குது? கூட்டத்தை வச்சு சொல்றீங்களா? அதெல்லாம் வேடிக்கை பார்க்க வர்ற கூட்டம்ப்பா… கூட்டம் வந்துட்டா உடனே அவர் பெரிய ஆளா? கூட்டம் ஓட்டா மாறுமா? ஓட்டு சீட்டா மாறுமா? அதெல்லாம் எப்படி மாறும்? அதெல்லாம் மாறாது…” இப்படி வன்மத்துல கேள்வி கேட்கிறவங்களுக்கு நான் ஒன்னே ஒன்னு சொல்றேன்…

இந்தத் தேர்தல் வந்து எல்லாரும் சொல்ற மாதிரி தேர்தல் எல்லாம் கிடையாது, இது வந்து இருமுனைப் போட்டி மட்டும்தான். மக்கள் கூட்டணியான நமக்கும் ஸ்டாலின் சார் கூட்டணிக்கும் மட்டும்தான் இந்தத் தேர்தல். அதென்னப்பா ஸ்டாலின் சார் கூட்டணி பேரா மக்கள் நல கூட்டணியா? மொத்த பேக்கேஜும் அங்கதானே இருக்குது.

ரிசல்ட் என்ன தெரிஞ்சதுனால என்னமோ அவர் அந்தப் பழைய மக்கள் நலக் கூட்டணியாவே மாத்திக்கிட்டாரோ என்னமோ எனக்குத் தெரியல. உடைஞ்ச கிளாஸ ஒட்ட வெச்ச மாதிரி, கிழிஞ்சத் துணியத் தச்ச வெச்ச மாதிரி, இது வந்து ஒரு ஒட்டுப்போட்ட ஒரு கூட்டணி அவ்வளவுதான்.

அதனால, நீங்க ஆல்ரெடி டிசைட் பண்ணி வைச்சிருக்கிற மாதிரி உங்களோட ஓட்ட சிந்தாம சிதறாம நம்மளுடைய டிவிகே வேட்பாளர்களுக்கும் நம்மளுடைய டிவிகே விசில் சின்னத்துக்கும் தயவு செஞ்சு ஓட்டு போட்டுருங்க.

தேர்தலில் இருமுனைப்போட்டி தான். நமக்கும், ஸ்டாலின் சார் கூட்டணிக்கும் இடையே தான் போட்டி. இவ்வாறு விஜய் பேசினார்.

இதையும் படியுங்கள்:
விஜய் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு..! விஐபி வேட்பாளர் பட்டியல் வெளியானது..!
vijay speech in chennai

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com