#JUST IN : நாளைய அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம்பெறப் போவது யார்?

cm-vijay-
cm-vijay-
Updated on

தமிழ்நாட்டில் மே 10, 2026 அன்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான புதிய அரசு பதவியேற்றது. அவரது அமைச்சரவையில் தற்போது 9 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். தற்போது முதற்கட்ட அமைச்சரவையை் தொடர்ந்து தவெக அரசுக்கு ஆதரவளித்துள்ள காங்கிரஸ், விசிக போன்ற கூட்டணிக் கட்சிகளை இணைத்து அமைச்சரவையை மேலும் விரிவாக்கம் செய்ய ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் நாளை தமிழக அமைச்சை விரிவாக்கம் செய்யப்படும் என்ற தகவல் வெளியானது.த.வெ.க. அமைச்சரவை நாளை விரிவாக்கம் எனக் கூறுப்படும் நிலையில் ஆளுநர் சென்னை திரும்புகிறார்.தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் இன்று இரவு 10.50 மணிக்கு சென்னை வருகிறார்.

நாளை தவெக அமைச்சரவை விரிவாக்கத்தில் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் என 3 கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெறுவதை உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு அமைச்சரவையில் முதலமைச்சர் விஜயுடன் இணைந்து விசிக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்களும், தவெகவைச் சேர்ந்த இரண்டாம் கட்டத் தலைவர்களும் இடம்பெற தீவிர பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. குறிப்பாக விசிக தலைவர்களுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்க முதலமைச்சர் விஜய் விரும்புவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.தமிழக அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயூஎம்எல் இணைய வேண்டும் அழைப்பு விடுத்திருந்தார்.

அத்துடன் தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கும் அமைச்சரவையில் வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக நியமிக்கப்படும் அமைச்சர்கள் நாளை பதவியேற்கிறர்கள்.

சற்றுமுன் வந்த தகவலின்படி திண்டிவனம் தொகுதி வி.சி.க எம்.எல்.ஏ. வன்னி அரசுவுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தமிழக அமைச்சரவையில் அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து வந்த எம்.எல்.ஏக்கள் இடம்பெற்றால், த.வெ.க அரசுக்கு அளித்து வரும் ஆதரவு குறித்து மறுபரிசீலனை செய்வோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) ஆகிய இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
ஆம்புலன்ஸ் ஜீப்பை ஓட்டிப் பார்த்த முதல்வர் விஜய்: தலைமை செயலகத்தில் சுவாரசியம்..!
cm-vijay-
logo
Kalki Online
kalkionline.com