#BIG NEWS : நாளை காலை 11.30 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்!

TVK Vijay
Vijay in assembly AI
Updated on

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக 34.92% வாக்குகள் பெற்று 108 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.118 இடங்களில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில், 108 இடங்களை மட்டுமே தவெக பெற்றுள்ளது.

தவெக தலைவர் விஜய்யும் ஆளுநருக்கு கடிதம் எழுதி 2 வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிப்பதாக கூறிய நிலையில் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை அளிக்குமாறு ஆளுநர் கூறியிருந்தார்.

இந்நிலையில், தவெக கேட்டுக்கொண்டதன் பேரில், 5 எம்எல்ஏக்களை கொண்டுள்ள காங்கிரஸ், தனது ஆதரவை இன்று வழங்கியது.

இந்நிலையில், இன்று ஆளுநரை விஜய் சந்தித்திருக்கிறார். முதலில் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுக்கொள்வார். அதனை தொடர்ந்து அமைச்சரவையும் பதவியேற்கும். பின்னர் சட்டமன்றத்தில் விஜய் பெரும்பான்மையை நிரூபிப்பார்.

யார் யாருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.இந்நிலையில் செங்கோட்டையனுக்கு தற்காலிக சபாநாயகர் பதவி வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இதற்கான கடிதத்தை ஆளுநரிடம் விஜய் வழங்க உள்ளதாகவும், தற்காலிக சபாநாயகருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.

செங்கோட்டையனுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க, அவர் புதிய எம்.எல்.ஏ-க்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். மேலும், அவர் பேரவை முன்னவராகவும் செயல்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது

தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகரை சந்தித்த விஜய், ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார். இதுதொடர்பான கடிதத்தில் நாளை காலை 11:30 மணிக்கு பதவியேற்கவும் கேட்டுள்ளார். பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், தற்போது வரை 112 MLA-க்களின் ஆதரவை தவெக பெற்றுள்ளது. எனவே, பெரும்பான்மையை நிரூபிக்க 2 வாரங்கள் விஜய் அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேரு உள்விளையாட்டரங்கில் நாளை காலை 11:30 மணிக்கு தவெக தலைவா் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளாா்.

விஜய் முதல்வராக பதவியேற்கும் விழாவிற்கு சுமாா் 5,000 நபா்கள் வரை அனுமதிக்கப்படுவாா்கள் என கூறப்படுகிறது

logo
Kalki Online
kalkionline.com