உள்துறை செயலாளருக்கு அனுப்ப வேண்டிய கடிதம் மணிப்பூர் ஆளுநரிடம் சென்றது எப்படி? - த.வெ.க. நிர்மல்குமாரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

vijay
vijay source:vikatan
Published on

தவெக கட்சித் தலைவர் விஜய் கலந்து கொள்ளும் கூட்டங்களில் கட்டுக்கடங்காத மக்கள் மற்றும் ரசிகர்கள் திரண்டு வருவதுடன் உயிர்பலி போன்ற அசம்பாவிதங்களும் நிகழ்ந்து வருகிறது.

கூட்டங்களுக்கு தாங்கள் கோரிய படி அனுமதி அளிக்காததுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் முறையாகத் தரவில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகளை காவல்துறை மீது வைத்தது தவெக. இந்நிலையில் தேர்தலுக்கான வேட்பு மனு அளித்து விட்டு பெரம்பூர் மற்றும் கொளத்தூரிலும் விஜய் நடத்திய ரோடுஷோ பிரச்சாரத்தில் அதிக கூட்டம் கூடியதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது குறித்து பொதுமக்களுக்கு இடையூறு , அதிகமான கூட்டம் போன்ற தேர்தல் விதிமுறை மீறல்ஙளல குறிப்பிட்டு காவல்துறையும் வழக்கு பதிவு செய்தது.

இந்நிலையில் தற்போது தவெக கட்சி சார்பாக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல்குமார் தங்கள் கட்சித் தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு கோரி ஒன்றிய உள்துறை செயலாளர் அமித்ஷாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

ஒய் பிரிவு பாதுகாப்பில் உள்ள விஜய் ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்துக்கு வரும்போது விஐபி கான்வாய் ஏற்பாடு செய்யவில்லை என்றும் விஜய் இருக்கும் இடத்திலிருந்து 10 மீட்டர் தொலைவில்துன் தொண்டர்களை நிறுத்தவேண்டும் என்ற விதிமுறையை காவல்துறை மீறியதாகவும் கூட்டம் நடக்கும் இடத்தில் பெரிய பேருந்துகளை நிறுத்த அனுமதி அளித்து இடையூறு விளைவித்ததாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டு பிரச்சார பயணத்துக்கு பாதுகாப்பு அளிக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்து அக்கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகிறது.

இதில் நடந்த சுவாரஸ்யம் தற்போது வைரலாக பேசப்படுகிறது. விஜய்க்கு பாதுகாப்பு கேட்டு, ஒன்றிய உள்துறை செயலாளருக்கு எழுத வேண்டிய கடிதத்தை, மணிப்பூர் மாநில ஆளுநருக்கு தவறாக எழுதி அனுப்பியுள்ளார் தவெக நிர்வாகி நிர்மல்குமார். 2 ஆண்டுகளுக்கு முன்பு உள்துறை செயலாளர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற அஜய் குமார் பல்லா கடந்த ஓராண்டாக மணிப்பூர் ஆளுநராக பதவி வகிக்கிறார்.

இந்த கடிதத்தில், மத்திய உள்துறை செயலராக த.வெ.க.,வால் குறிப்பிடப்பட்டுள்ள அஜய் குமார் பல்லா தற்போது மணிப்பூர் கவர்னராக இருக்கிறார். உள்துறை செயலர் பொறுப்பில் இருந்து அவர் ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன. தற்போது, உள்துறை செயலராக கோவிந்த் மோகன் என்பவர் இருக்கிறார். இந்த விபரம் தெரியாமல், மணிப்பூரில் கவர்னராக உள்ள பழைய உள்துறை செயலருக்கு த.வெ.க., கடிதம் எழுதியுள்ளது, சமூக வலைதளத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

இதில் வந்த குழப்பமே நிர்மல் குமாரின் கவனக்குறைவுக்கு காரணம் என்றாலும் இது குறித்து நெட்டிசன்களின் கருத்துக்கள் வைரலாகி உள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING ஐபில் 2026: லக்னோவை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்..!!
vijay

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com