பிரதமர் வேட்பாளர் விவகாரம்: தவெகவுக்கு திருமாவளவன் வைக்கும் செக்!

CM vijay and Thirumavalavan
Vijay Thiruma
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on: 

இன்று செய்தியாளர்களை சந்திந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தவெகவின் தேசிய அரசியல் நிலைப்பாட்டை ஏற்க மறுத்துள்ளார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமாவளவன் பேச்சுக்கு தவெக ஐடி விங் என்ன மாதிரி பதில் அளிக்கும்? என்று எதிர்க்கட்சிகள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றன.

சமீபகாலமாக விஜய்யை பிரதமர் வேட்பாளராக தவெக முன்னிறுத்தி வருகிறது. தவெக தற்போது காங்கிரஸ் கட்சி மற்றும் பிற கட்சி ஆதரவுடன் ஆட்சியில் இருக்கிறது, கூட்டணி அமைச்சரவையிலும் காங்கிரஸ் கட்சி பங்கேற்றுள்ளது. ஆனாலும் இந்த கூட்டணி இன்டியா கூட்டணியில் இல்லாமல் தமிழக அளவில், தவெக தலைமையில் இயங்கி வருகிறது. சமீபத்திய கருத்துக் கணிப்புகளில் பிரதமர் மோடி , எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை தொடர்ந்து பிரதமர் ரேசில் விஜய் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம், அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்க விட்டாலும் காங்கிரஸ் , கம்யூனிஸ்டுகள் , விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக அரசு ஆட்சி அமைத்தது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக கூட்டணி அரசு அமைந்தது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளுக்கு முதல் முறையாக தமிழக கூட்டணி அரசில் அமைச்சர் பதவியும் கிடைத்தது.

கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகளில் ஆட்சியை விஜய் பிடித்துள்ளதால், இந்தியா முழுக்க அவரது புகழ் பரவி உள்ளது. முன்பு காங் கூட்டணி கட்சிகள் , பிரதமர் வேட்பாளராக தங்கள் கட்சி வேட்பாளர்களையே முன்னிறுத்தி உள்ளது. மே.வங்கத்தின் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி , ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசியவாத காங் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட பல இன்டியா கூட்டணிக் கட்சி தலைவர்களும் இதற்கு முன்னர் ராகுலை பிரதமர் வேட்பாளர் என்று ஏற்றதில்லை . அந்தக் கூட்டணியில் உள்ள பல கட்சிகள் , தேர்தலுக்கு பின்னரே பிரதமர் பதவியைப் பற்றி முடிவு செய்துக் கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்தனர்.

Thiruma
Thiruma car controversy X

தற்போது மம்தா பானர்ஜி , அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோர் சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளதால் , அவர்கள் கட்சியும் உடைந்துள்ளது. தமிழகத்தில் திமுகவும் தோல்வி அடைந்துள்ளதால், நேரம் பார்த்து தவெக தங்களை தேசிய அரசியலில் முன்னிறுத்த பிரயார்த்தனம் செய்து வருகின்றனர்.தொடர்ச்சியாக 3 பாராளுமன்ற தேர்தலிலும் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி ராகுலை முன்னிறுத்தினாலும் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளன.

இதை எல்லாம் கருத்தில் கொண்டு கேரளாவில் தவெகவின் கிளை தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தென்னிந்திய மாநிலங்களில் தவெக கிளை தொடங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது மேற்கு வங்கத்தில் அதன் கிளை தொடங்கப்பட்டது , தேசிய கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் தவெக - காங்கிரஸ் இடையே பிரதமர் வேட்பாளர் யார்? என்ற வார்த்தை மோதல் இருக்கும் நிலையில், "முதல்வர் விஜய் பிரதமர் வேட்பாளர் என்று யாரும் அதிகாரப்பூர்வமாக பிரச்சாரம் செய்யவில்லை. தவெக தொண்டர்கள், நிர்வாகிகள் ஆர்வமிகுதியால் அவரைப் பிரதமர் வேட்பாளர் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர். இதை அரசியல் நிலைப்பாடாக பார்க்க முடியாது" என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருக்கிறார்.

logo
Kalki Online
kalkionline.com