

தமிழகத்தில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தனித் தொகுதிகளுக்கும் வருகிற அக். 6 ஆம் தேதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இதனிடையே, தவெக சார்பில் முதல்வர் விஜய் உள்பட கட்சித் தலைவர்களின் பெயர்களும் தவெக நட்சத்திரப் பேச்சாளர்களின் பட்டியலில் இடம் பெற்றன.
த.வெ.க., நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில், காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர், வி.சி.க., தலைவர் திருமாவளவன், அமைச்சர் வன்னி அரசு, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, துரை வைகோ, முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகி தீன் உட்பட, பிற கட்சி தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இதைத் தொடர்ந்து, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன், பிரிவு 77ன்படி, நட்சத்திர பேச்சாளர்களாக, அந்தந்த கட்சியினரை மட்டுமே அறிவிக்க முடியும். ஆனால், பிற கட்சியினரின் பெயர்களுடன் த.வெ.க., அளித்த பட்டியலை தேர்தல் கமிஷன் அங்கீகரித்து உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
தனித்தனி அரசியல் கட்சிகளின் தலைவர்களான வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர், எந்த சட்டத்தின் கீழ், மற்றொரு கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்? தேர்தல் அறிவிப்பிலிருந்து ஏழு நாட்களுக்குள், நட்சத்திர பேச்சாளர் பட்டியலை தேர்தல் கமிஷனிடம் அளிக்க வேண்டும். அந்த காலக்கெடு முடிந்து விட்டதால், அந்த பட்டியலில் இருப்போர், பிரசாரம் செய்தால், தேர்தல் கமிஷன் விதிப்படி, அவர்களின் பிரசார செலவு முழுவதையும், த.வெ.க., வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்க வேண்டும்.
த.வெ.க., நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில், காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர், வி.சி.க., தலைவர் திருமாவளவன், அமைச்சர் வன்னி அரசு, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, துரை வைகோ, முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகி தீன் உட்பட, பிற கட்சி தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், பிரிவு 77ன்படி, நட்சத்திர பேச்சாளர்களாக, அந்தந்த கட்சியினரை மட்டுமே அறிவிக்க முடியும். ஆனால், பிற கட்சியினரின் பெயர்களுடன் த.வெ.க., அளித்த பட்டியலை தேர்தல் கமிஷன் அங்கீகரித்து உள்ளது. இது, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் கமிஷன் செயல்படுகிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் கூட்டணி கட்சியினர் பெயர்கள் தவெக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்ததற்கு அதிமுக, திமுக புகார் அளித்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் தவெக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் மாற்றம்.
திருமாவளவன், மாணிக்கம் தாகூர், வைகோ, துரை வைகோ, காதர் மொய்தீன் ஆகியோரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது