விஜய் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி செய்தி: தவெக தொண்டர்கள் உற்சாகம்!

இந்திய தேர்தல் ஆணையம் தவெகவை மாநிலக் கட்சியாக அங்கீகரித்துள்ளது. விசில் சின்னம் மற்றும் விஜய்யின் எக்ஸ் தள பதிவு குறித்த முழு விவரங்கள்.
Vijay twitts
vijay x TwitVijay
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் மாநிலக் கட்சியாக அங்கீகாரம் அளித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பின்படி தவெக விசில் சின்னத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று, மாநில அளவில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சியாக முதன்மை பெற்றது. ஆனாலும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவிற்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை.

கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் மாநில கட்சிக்கான அடிப்படை தகுதியான 6 சதவீத ஓட்டுகளை தாண்டி தவெக பெற்றுள்ளது. மொத்த சட்டமன்றத்தில் 3% என்று வரம்பினையும் அது கடந்துள்ளது. இதனால் , தற்போது மாநில கட்சியாக

தவெக இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு விட்டது. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தினால் மகிழ்ந்துள்ள தவெக கட்சித் தலைவர் தனது x தளத்தில் ஒரு செய்தியை மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில்

"என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்.

முப்பதாண்டுகளுக்கும் மேலாக அளவற்ற அன்பை வாரி வழங்கி, வாழ்வில் கிடைத்தற்கரிய ஓர் உயரிய இடத்தைப் பேரன்புடன் தந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவனாக, உறவாக, மகனாக, அண்ணனாக, தம்பியாக ஒவ்வோர் இல்லத்திலும் உள்ளத்திலும் ஒரு நிரந்தர இடத்தை வழங்கி, தாயன்புடன் தாங்கி வருகின்றீர்கள்.

எல்லாவற்றையும் அளித்த ஒட்டுமொத்தத் தமிழக மக்களுக்கும் உலகத் தமிழ் உறவுகளுக்கும் என் நன்றியை எப்படித் திருப்பிச் செலுத்துவது என்று யோசித்தோம். அதன் வெளிப்பாடாகவே, உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே 2024-இல் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கினோம்.

மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் அரசியல் களம் கண்டே 27 மாதங்கள்தான் ஆகின்றது. ஆனால் அதற்குள், தமிழக அரசியல் வரலாற்றில் எவருக்கும் கிடைத்திராத ஒரு பேரதிசயத்தை, கடந்த சட்டமன்றத் தேர்தலில் நிகழ்த்திக் காட்டினீர்கள்.

TVK Actor Vijay
TVK Actor Vijay

35% வாக்குகளுடன் தனிப்பெரும் கட்சியாகத் த.வெ.க.வை உயர்த்திப் பிடித்தீர்கள். உங்கள் தீர்ப்பை மதித்த ஜனநாயக சக்திகளின் ஆதரவுடன் இதோ இன்று, தமிழக மக்களின் முதல் சேவகனாக, முதலமைச்சராக உங்கள் விஜய். ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தை லட்சியமாகக் கொண்டு, மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி அமைத்து, தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆட்சியை நிறுவிக் காட்டி இருக்கிறோம்.

மக்களே… என் சொந்தங்களே…தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பேரதிசயத்தை நீங்கள் நிகழ்த்திக் காட்டினீர்கள். அதன் வெளிப்பாடாக, இந்தியத் தேர்தல் ஆணையம் உங்கள் தமிழக வெற்றிக் கழகத்தை, தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவித்துள்ளது. ஜனநாயகப் புரட்சியை சத்தமில்லாமல் நிகழ்த்திய உங்கள் விசில் சின்னத்தையும் த.வெ.க.வின் சின்னமாக அங்கீகரித்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் நம்மை நம்புகிற ஒட்டுமொத்த மக்களுக்கான நன்றிக்கடன் பணி என்றென்றும் தொடரும். இந்த வேளையில், பேருழைப்பைத் தந்து கழகம் காக்கும் தோழர்களையும் நிர்வாகிகளையும் நெகிழ்வுடன் நினைத்துப் பார்க்கிறேன். அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!"

என்று குறிப்பிட்டுள்ளார். தவிக்க கட்சி அங்கீகாரம் பெற்றதைத் தொடர்ந்து, கட்சித் தொண்டர்கள் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com