தவெக தலைவர் விஜய் இன்று 234 தொகுதி வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது பல்வேறு வாக்குறுதிகளை கூறினார்.வேலைவாய்ப்பில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை வழங்கப்படும்,டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ. 2,000 உதவித்தொகை என அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தவெக தலைவர் விஜய்,இளைஞர்களுக்கான தவெக தேர்தல் அறிக்கையை வாசித்தார்.
அதில், "போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்பதை உருவாக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் தடுப்பு மன்றம் அமைக்கப்படும்.
நிதி நெருக்கடியால் கல்வி தடைபடுவதைத் தவிர்க்க, 12-ம் வகுப்பு முதல் முனைவர் பட்டம் (Ph.D) வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ. 20 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கப்படும்.
29 வயதிற்கு மேல் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4 ஆயிரம், டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
5 லட்சம் பேருக்கு இன்டன்ஷிப் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
TNPSC, TRB, TNEB-க்களில் காலதாமதம் இல்லாமல் போட்டி தேர்வுகள் நடத்தப்படும்.
அரசுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை முறைப்படுத்தப்பட்டு, நிலையான முறையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
75 சதவீத தமிழர்களுக்கு வேலை வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு மாநில ஜிஎஸ்டி (SGST) வரியில் 2.5 சதவீத மானியமும், மின் கட்டணத்தில் 5 சதவீத மானியமும் வழங்கப்படும்.
இளைஞர்களை நேரடியாக பாதிக்கும் விஷயங்கள் குறித்து கரத்து தெரிவிக்க ஏற்பாடு
முதல்வர் மக்கள் சேவை மெம்பர் என்ற புதிய பதவி உருவாக்கப்படும்.
இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை லோன் வழங்கப்படும்" ஆகிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.