டிவிட்டரும்,எலான் மஸ்க்கும்! நாளொரு மேனியும் பொழுதொரு திட்டமுமாக டிவிட்டர்!

எலான் மஸ்க்
எலான் மஸ்க்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிபடுத்தும் புளூ செக் கட்டண சேவையை மீண்டும் தொடங்குவதை ட்விட்டர் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. எலான் மஸ்க் சமீபத்தில் தான் சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்தில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அவ்வப்போது அறிவித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கும் முன்பு ட்விட்டரின் ‘புளூ டிக்கிற்கு’ இனி மாதம் 7.99 டாலர் கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளதாக எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்தச் சேவையானது இந்தியாவில் பெற மாதம் ரூ. 719 செலவாகும்.

ஆனால் தற்போது அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிபடுத்தும் புளூ செக் கட்டண சேவையை மீண்டும் தொடங்குவதை ட்விட்டர் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் புளூ செக் சேவையை பயன்படுத்தும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வெவ்வேறு அடையாள நிறங்களை வழங்க உள்ளதாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.

elan musk
elan musk

அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ கணக்குகளில் ‘புளூ டிக்கை’ பயன்படுத்தி வருகின்றனர். இந்த ட்விட்டர் கணக்கு அவர்களுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு தான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள, ட்விட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும்.

இந்த நிலையில், அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிபடுத்தும் புளூ டிக்கிற்காக பயனாளர்களிடம் மாதம் தோறும் 19.99 அமெரிக்க டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்படும் என முதலில் தகவல்கள் வெளியானது. இதற்கு இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

logo
Kalki Online
kalkionline.com