இன்று 8 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்..!

ungaludan stalin camp
ungaludan stalin campimg credit-sarkariyojana.com
Published on

சென்னை மாநகராட்சி பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று (29.08.2025) திருவொற்றியூர் மண்டலம் (மண்டலம்-1), வார்டு-13ல் எம்.ஜி.ஆர். சாலை சுங்கச்சாவடி, ஆர்.பி.சி. பொதுப்பள்ளி, மாதவரம் மண்டலம் (மண்டலம்-3), வார்டு-25ல் மாதவரம் வட்டச்சாலையில் உள்ள வீட்டுவசதி துறை விளையாட்டு மைதானம், தண்டையார்பேட்டை மண்டலம் (மண்டலம்-4), வார்டு-40ல் புது வண்ணாரப்பேட்டை, திருவள்ளுவர் நகரில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி, ராயபுரம் மண்டலம் (மண்டலம்-5) வார்டு-60ல் ஜார்ஜ் டவுன், அங்கப்பன் நாயகன் தெருவில் உள்ள சென்னை உருது நடுநிலைப்பள்ளி, திரு.வி.க. நகர் மண்டலம் (மண்டலம்-6), வார்டு-65ல் கொளத்தூர், பள்ளி சாலையில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளி, தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்-9), வார்டு-122ல், நந்தனம், 2வது குறுக்கு டர்ன்ஸ்புல் சாலையில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானம், பெருங்குடி மண்டலம் (மண்டலம்-14), வார்டு-188ல், மடிப்பாக்கம், பாலையா கார்டன், பஜனைக்கோயில் தெருவில் உள்ள ருக்மணி மஹால், சோழிங்கநல்லூர் மண்டலம் (மண்டலம்-15) வார்டு-199 சோழிங்கநல்லூர், அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 8 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

இதையும் படியுங்கள்:
மக்களே உஷார்..! வெள்ளிக்கு வரப்போகும் ஆப்பு...செப் 1ம் தேதி முதல் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்..!
ungaludan stalin camp

இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com