#BUDGET 2026-27: தனிநபர் வருமான வரி விகிதத்தில் மாற்றம் இல்லை..!

Big update
Budget 2026
Updated on

* வெளிநாட்டு பயண திட்டங்களுக்கான டிசிஎஸ் வரி 20 சதவீதத்தில் இருந்து 2 ஆக குறைக்கப்பட்டுள்ளது.4

* வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

* தனிநபர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 வரை அவகாசம்.

* வருமான வரி பிடித்தம் தொடர்பான விதிகளில் தளர்வு

* சாதாரண குடிமக்கள் தாக்கல் செய்யும்படி வருமான வரி தாக்கல் நடைமுறை எளிமையாக்கப்படும்.

* திருத்தப்பட்ட வருமான வரி கணக்கு தாக்கலுக்கு மார்ச் 31 வரை அவகாரம்

* வருமானம் குறித்த தவறான தகவல்களுக்கு 100 சதவீதம் அபராதம்.

* மருத்துவ கல்வி கடனுக்கான வரி 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைப்பு

* வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அசையா சொத்து விற்பனை மீதான வரி குறைக்கப்படும்.

* புதிய வருமான வரிச் சட்டத்தில் ஈவுத்தொகைக்கான வரியில் இருந்து விலக்கு

* கிளவுட் கம்ப்யூட்டிங் நிறுவனங்களுக்கு 2047 வரை வரி கிடையாது.

* தனிநபர் வருமான வரி விகிதத்தில் மாற்றம் இல்லை.புதிய வருமான வரி பிரிவின் கீழ் உள்ளவர்களுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி கிடையாது என்ற நிலை தொடரும்.

நீங்கள் 12 லட்சத்திற்கு மேல் உங்கள் சம்பளம் போகும் போது பின்வரும் ஸ்லாப் நடைமுறை ஆகும்.

  • 0-4 லட்சம் ரூபாய்க்கு வரி இல்லை

  • 4-8 இலட்சம் ரூபாய்க்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்

  • 8-12 லட்சம் ரூபாய் 10 சதவீதம் வரி விதிக்கப்படும்

  • 12-16 இலட்சம் ரூபா 15 சதவீதம் வரி விதிக்கப்படும்

  • 16-20 லட்சம் ரூபாய் 20 சதவீதம் வரி விதிக்கப்படும்

  • 20-24 இலட்சம் ரூபா 25 சதவீதம் வரி விதிக்கப்படும்

  • 24 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதம் வரி விதிக்கப்படும்



* லித்தியம் பேட்டரிகளுக்கு இறக்குமதி வரி கிடையாது.

* காலணி ஏற்றுமதியாளர்களுக்கான மூலதன பொருட்கள் இறக்குமதிக்கு வரி இல்லை.

* 17 வகையான புற்றுநோய் மருந்துகளுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.

* வரும் ஆண்டுகளில் 1.5 லட்சம் சுகாதாரப் பணியாரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

* மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த தனியார் துறைகளோடு இணைந்து நாடு முழுவதும் 5 மருத்துவ முனையங்கள் அமைக்கப்படும்.

* நாட்டின் 3 இடங்களில் சர்வதேச தரத்தில் ஆயுர்வேத சிகிச்சை மையம் நிறுவப்படும்.

* மருத்துவ சிகிச்சைகளுடன், நோய் கண்டறிதல் உள்ளிட்டவையும் மேற்கொள்ளப்படும்.

* நாள்பட்ட நோயாளிகளுக்கு உதவிபுரிய 1.5 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்படும்.

* மாவட்டந்தோறும் மாணவிகளுக்கான விடுதிகள் அமைக்கப்படும்.

* மருத்துவ சுற்றுலாவை மேம்படுதத நாடுமுழுவதும் 5 மருத்துவ முனையங்கள் அமைக்கப்படும்.

* ஏஐ, குவாண்டம் தொழில்நுட்பத்தை பல்வேறு துறைகளில் அறிமுகப்படுதத ஒருங்கிணைந்த திட்டங்கள் அமைக்கப்படும்.

* தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் கலாச்சார செழுமையை விளக்கும் வகையில் மையம் அமைக்கப்படும்.

* ஆதிச்சநல்லூரில் உள்பட 15 இடங்களில் உள்ள தொல்லியல் சார்ந்த இடங்கள் மேம்படுத்தப்படும்.

* ஆயுஸ் மருந்தகங்கள் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.

* பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்க திட்டம்.

* புலிகட் ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்க திட்டம்.

* 2026-27 ஆம் நிதியாண்டில் ரூ.16.5 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு முடிவு

* நாடு முழுவதும் கால்நடை மருத்துவ கல்லூரிகளுக்கு மூலதன மானியம் வழங்கப்படும்.

* 500 நீர்நிலைகளில் மீன்பிடி தொழில், கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

* கார்பன் உமிழ்வை குறைக்க 4 துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு.

* மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு SHE MART என்ற பெயரில் கடைகள் அமைக்கப்படும்.

* முந்திரி உற்பத்தியை மேம்படுத்த பிரத்யேக இயக்கம் முன்னெடுக்கப்படும்.

* சந்தன மரங்கள் சாகுபடிக்கு மாநில அரசுகளுடன் சேர்ந்து திட்டம் உருவாக்கப்படும்.

* வெளிவாடு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்வதற்கான வரம்பு 10 சதவீதத்தில் இருந்து 24 சதவீதமாக அதிகரிப்பு

* மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படும்.

* பொதிகை மலையில் மலையேற்ற சுற்றுலா வழித்தடம் அமைக்கப்படும்.

* நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் மாநிலங்களுக்கு படி ரூ.1.40 லட்சம் கோடி விடுவிப்பு

* பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கோழி வளர்ப்பை ஊக்குவிக்கவும் நடவடிக்கை

* விவசாயிகளின் நிலம், சாகுபடி உள்ளிட்டவற்றின் விவரங்களை ஒருங்கிணைக்க பாரத் விஸ்தார் ஏ.ஐ. செயலி.

* மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு விகிதத்தில் மாற்றம் இல்லை. 41 சதவீத அளவிலேயே தொடரும்.

* வரும் ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச்சட்டம் அமலுக்கு வரும்.

* விபத்து காப்பீட்டு தொகைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு.

logo
Kalki Online
kalkionline.com