மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் ராஜினாமா… காரணம் இதுதானா?

Pasubathi kumar paras
Pasubathi kumar paras

பீகார் மாநிலத்தில் லோக்சபா தேர்தலில் தனதுக் கட்சிக்கு ஒரு சீட் கூடத் தராததால் மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் தனதுப் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீடு அதிகாரப்பூர்வமாகத் திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. அதில் பாஜக 17, சிராக் பஸ்வானின் லோல் ஜன சக்தி கட்சிக்கு 5 தொகுதிகள், நிதிஷ்குமாரின் ஜேடியூவிற்கு 16 தொகுதிகள், எஞ்சிய இரண்டு சீட்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன.

லோக் ஜன சக்தி கட்சியை நிறுவிய ராம் விலாஸ் பஸ்வானின் சகோதரர்தான் பசுபதி குமார் பராஸ். மறைந்த தனது சகோதரரின் கட்சியிலிருந்துப் பிரிந்து சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் ஒரு புதிய கட்சியை துவங்கினார். ராஷ்ட்ரியா  லோக் ஜனசக்தி கட்சி எனப் பெயரிட்ட அவர் தனது கட்சியை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைத்தார். அதேபோல் மோதி தலைமையிலான மத்திய அமைச்சரவையிலும் பசுபதி இணைந்தார்.

இந்தநிலையில் தற்போது பீகாரில் தொகுதி பங்கீடு ஒதுக்கப்பட்ட நிலையில் பசுபதி கட்சியான ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சிக்கு ஒரு தொகுதியைக் கூட ஒதுக்கவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் இருந்தார் மத்திய அமைச்சர் பசுபதி. இதனை வெளிப்படுத்தும் விதமாகத் தனது மத்திய அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இதையும் படியுங்கள்:
ராஜமௌலியின் அடுத்த பிரம்மாண்டம்... இவ்வளவு பட்ஜட்டா?
Pasubathi kumar paras

இதுத்தொடர்பாக செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அவர், “நேற்று லோக்சபா தேர்தலின் தொகுதி பங்கீட்டின் 40 வேட்பாளர்களின் பட்டியல் வெளியானது. எங்கள் கட்சியில் மொத்தம் 5 எம்பிகள் உள்ளன. மேலும் நானும் முழு நேர்மையுடன் உழைத்து வந்தேன். எங்களுக்கும் எங்கள் கட்சிக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ஆகையால், நான் எனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.” இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் பீகாரில் ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் பசுபதி குமார் பராஸின் ராஷ்ட்ரியா லோக் ஜனசக்தி கட்சி இணைய வாய்ப்புள்ளது என்று செய்திகள் வந்துள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com