

இந்திய ராணுவத்தில் சேர லட்சியமாக கொண்டவர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பை ஒன்றிய அரசுப் பணி தேர்வாணையம்(UPSC) வழங்குகிறது. இது பற்றிய , தேசிய பாதுகாப்பு அகடமியின்(NDA-1) அறிவிப்பை டிசம்பர் 10 ஆம் தேதி UPSC வெளியிட்டுள்ளது. 12 ஆம் வகுப்புக்குப் பின் தரைப்படை , கடற்படை , விமானப்படையில் அதிகாரிகளாகவும் , தொழில்நுட்ப வல்லுநர்களாகவும் சேர இளைஞர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். விண்ணப்பங்களை டிசம்பர் 10 ஆம் தேதியில் இருந்து விண்ணப்பிக்க தொடங்கலாம் , இதற்கான இறுதி தேதி டிசம்பர் 30, 2025 அன்று மாலை 06:00 மணி வரை கெடு உள்ளது. எழுத்துத் தேர்வு ஏப்ரல் 12, 2026 அன்று நடத்தப்படும்.
விண்ணப்பிக்க தகுதிகள்:
விண்ணப்பதாரர்கள் ஜூலை 1, 2007 முதல் ஜூலை 1, 2010 வரை பிறந்தவராக இருக்க வேண்டும். அதற்கு முன்னும் பின்னும் பிறந்திருக்க கூடாது.
திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே தகுதியுடையவர்கள்.10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது 12 ஆம் வகுப்பு முடித்த அல்லது ஏப்ரல் 2026 க்குள் முடிக்கும் அனைவரும் இதற்கு விண்ணப்பிக்க முடியும். இந்தியக் குடியுரிமை பெற்ற எந்த மாநிலத்தவரும் இதற்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் நேபாளம் அல்லது பூட்டானை சேர்ந்த குடிமக்களும் , விதிமுறைகளின் படி திபெத்திய அகதியாக தங்கியிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
உடல் தகுதிகள் : நல்ல ஆரோக்கியமான உடல் தகுதியை பெற்றிருக்க வேண்டும். உயரம் , எடை , பார்வைத்திறன் , மார்பளவு ஆகியவையும் , இன்னும் சில திறன்களும் சோதனை செய்யப்படும்.
மொத்தக் காலியிடங்கள் : ராணுவம் , கடற்படை , விமானப்படை ஆகியவற்றையும் சேர்த்து 394 பணியிடங்கள் உள்ளன.
ராணுவம் : 208
கடற்படை : 42
விமானப்படை ( பறக்கும் அதிகாரி + தரையில் தொழில் நுட்ப வல்லுனர்) : 120
கடற்படை : 24
தேர்வு தேதி : ஏப்ரல் 12 ,2026
தேர்வு முடிவு: மே/ ஜூன் 2026 இல் வெளியிடப்படும்.
தேர்வுகள் :
NDA 1 தேர்வுகள் மொத்தமாக 900 மதிப்பெண்கள் உள்ளடக்கியது. இதில் இரண்டு முக்கிய தாள்களை கொண்டு ஒரே நாளில் தேர்வுகள் நடைபெறும். முதல் தாள் கணிதப் பிரிவில் 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும் . இதற்கு கொடுக்கப்படும் கால அவகாசம் 2.30 மணி நேரங்கள். இதற்கு அடுத்த தேர்வு பொது அறிவு பிரிவில் 400 மதிப்பெண்களுக்கும் , இங்கிலீஷ் பிரிவில் 200 மதிப்பெண்களுக்கும் சேர்த்து ஒரே தாளாக வழங்கப்படும். தேர்வுகள் அனைத்தும் தாளில் பேனா மூலம் நிரப்பும் பாரம்பரிய வடிவத்திலேயே நடைபெறும்.
நேர்முகத்தேர்வு:
தேர்வு முடிவுகள் வெளியான பின்னரே SSB நேர்முகத் தேர்வுகள் நடைபெறும் நாள் அறிவிக்கப்படும். தேர்வில் கட் ஆப் மதிப்பெண்களை (345 - 360) பெறும் நபரே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார். இந்த நேர்காணல் 5 நாட்கள் நடைபெறும். இதில் ஸ்கிரீன் டெஸ்ட் , உளவியல் , கலந்துரையாடல் , திறன் மேம்பாடு போன்றவற்றை உள்ளடக்கிய நேர்காணல் நடைபெறும். அதன் பின்னர் மருத்துவப் பரிசோதனைகள் முடிந்த பின்னரே இறுதி பட்டியல் வெளியாகும்.
விண்ணப்பிக்கும் முறை:
UPSC வலைத்தளத்திற்கு சென்று NDA-1, 2026 கான விண்ணப்பத்தை நிரப்பவும். இதற்கு உங்கள் புகைப்படம் , கையொப்பம் , அடையாளச் சான்று தேவைப்படும். விண்ணப்ப கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ₹100 கட்டணம் செலுத்த வேண்டும் , பெண்கள் மற்றும் பட்டியல் சமூகத்தினருக்கு கட்டணம் இல்லை. படிவத்தை சமர்பித்த பின்னர் உறுதிப்படுத்தலை பதிவிறக்கி கொள்ளவும். மற்ற தகவல்களுக்கு UPSC வலைத்தளத்தை பார்வை இடுங்கள்.