இந்தியாவில் ஸ்டார்லிங்க் வருது... ஆனா அந்த விலை? பதறிய இணையவாசிகள்... நிறுவனம் கொடுத்த அதிரடி விளக்கம்!

Starlink
Starlink
Published on

தொழில்நுட்ப உலகில் எலான் மஸ்க் என்றாலே ஒரு தனி ஈர்ப்புதான். டெஸ்லா கார் முதல் விண்வெளிப் பயணம் வரை அவர் செய்யும் ஒவ்வொரு விஷயமும் உலக அளவில் கவனிக்கப்படும். அந்த வகையில், இந்திய மக்கள் மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு திட்டம் தான் 'ஸ்டார்லிங்க்' (Starlink). 

பூமிக்கு மேலே செயற்கைக்கோள்களைப் பறக்கவிட்டு, அதன் மூலம் மூலை முடுக்குகளுக்கெல்லாம் அதிவேக இன்டர்நெட் கொடுப்பதுதான் இதன் நோக்கம். இந்தச் சேவை விரைவில் இந்தியாவில் தொடங்கப்பட உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக இணையத்தில் பரவிய ஒரு விலைப் பட்டியல் இந்தியர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. 

குழப்பத்தை ஏற்படுத்திய விலைப் பட்டியல்!

டிசம்பர் 8, 2025 அன்று இணையதளங்களில் ஒரு தகவல் தீயாகப் பரவியது. அதாவது, இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையைப் பெற வேண்டுமென்றால், மாதம் சந்தாக் கட்டணமாக மட்டும் ரூ.8,600 செலுத்த வேண்டும் என்றும், அந்த உபகரணங்களை (Kit) வாங்குவதற்கு ரூ.34,000 செலுத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைப் பார்த்ததும் நடுத்தர வர்க்க மக்கள் மற்றும் இணையவாசிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். "ஏற்கெனவே நம்ம ஊர்ல ஜியோ, ஏர்டெல் எல்லாம் மாசம் 500 ரூபாய்க்குக் குறைவான விலையில் அன்லிமிடெட் டேட்டா கொடுத்துட்டு இருக்காங்க. அப்படி இருக்கும்போது, வெறும் இன்டர்நெட்டுக்காக மாசம் 8000 ரூபாயை யார் செலவு பண்ணுவா?" என்ற கேள்வி எல்லோருக்கும் எழுந்தது. இது சாத்தியமே இல்லாத விலை என்று பலரும் விமர்சிக்கத் தொடங்கினர்.

நிறுவனம் அளித்த விளக்கம்!

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஸ்டார்லிங்க் நிறுவனம் உடனடியாக ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. அதில், "தற்போது பரவி வரும் கட்டண விவரங்கள் உண்மையானவை அல்ல. எங்கள் இணையதளத்தில் ஏற்பட்ட ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே, அந்தப் பழைய அல்லது தவறான எண்கள் திரையில் தோன்றியிருக்கலாம். 

இந்தியாவிற்கான சந்தாக் கட்டணத்தை நாங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக முடிவு செய்யவே இல்லை" என்று தெளிவுபடுத்தியுள்ளது. இந்த அறிவிப்புக்குப் பிறகுதான் இணையவாசிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

இதையும் படியுங்கள்:
இட்லிக்கு ஒரு சந்தையா? மாட்டுச் சந்தை இட்லி சந்தையாக மாறிய சுவாரசியம்!
Starlink

இந்தியச் சந்தையின் நிலை!

இந்தியாவைப் பொறுத்தவரை, இன்டர்நெட் என்பது இப்போது அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. ஆனால், இங்குள்ள மக்கள் விலையைப் பார்த்துத்தான் எந்தவொரு சேவையையும் தேர்ந்தெடுப்பார்கள். மாதம் 300 முதல் 500 ரூபாய் கட்டணத்தில் ஃபைபர் நெட் வசதி கிடைக்கும்போது, எலான் மஸ்க் அதைவிடக் குறைவான விலையிலோ அல்லது அதற்கு இணையான விலையிலோ கொடுத்தால் மட்டுமே இந்தியாவில் தாக்குப்பிடிக்க முடியும்.

ஸ்டார்லிங்க் வருகை என்பது இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக, மலைப்பிரதேசங்கள் மற்றும் கிராமப்புறங்களில் இது பெரிதும் உதவும். ஆனால், தற்போது வெளியான அந்த "ரூ.8,600" என்பது வெறும் வதந்தி அல்லது பிழை என்பது உறுதியாகிவிட்டது. உண்மையான விலை என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதுவரை வதந்திகளை நம்ப வேண்டாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com