
நீண்டகாலமாக மருந்து கண்டறியப்படாத நோய்களில் எச்.ஐ.வி நோயும் ஒன்று. இந்த நோய் ஒருவரை தாக்கி விட்டால் அவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் பல வித நோய் தொற்றுக்கள் ஏற்பட்டு இறுதியில் அந்த நோயாளி இறந்து விடுவார். இந்த நோய்க்கு நீண்ட காலம் ஆராய்ச்சி செய்தும் மருந்து கண்டறியப் படவில்லை. ஒரு சில நாடுகள் அவ்வப்போது இதற்கு மருந்து கண்டறிந்து விட்டோம் என்று அறிவித்தாலும் அதற்கு சரிவர அங்கீகாரம் இல்லை. அவர்கள் கொடுக்கப்பட்ட தகவல்கள் போதுமான அளவில் இல்லாததாலும், தரவுகளின் நம்பகத் தன்மை கேள்விக்கூறியதாக இருந்தாலும் அங்கீகரிக்க முடியவில்லை.
எச்.ஐ.வி வைரஸ் ஒருவரின் இரத்தத்தில் நுழைந்து விட்டால் அதன் பின்னர் அந்த வைரசை அழிக்க முடியாது. அந்த வைரஸ் தொடர்ச்சியாக இரத்தத்தில் பரவும் தன்மை கொண்டது. இந்த வைரஸ் பெறப்பட்ட நோய் எதிர்ப்பு குறை நோயை(எய்ட்ஸ்) ஏற்படுத்தும் .
இந்த வைரஸை முற்றிலும் அழிக்கும் எந்த மருந்தும் இல்லை. இதனால் இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனது முடிவை எதிர்பார்த்து காத்திருக்கும் மோசமான நிலை உள்ளது.
கோவிட் பெரும் தொற்று காலத்திற்கு பிறகு உலகளவில் மருத்துவ துறையில் நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. நீண்ட காலமாக பல நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்காமல் இருந்தனர். அமெரிக்காவை தவிர எந்த நாடும் புதிய மருந்து சோதனைகளில் ஈடுபடவில்லை. பல நாடுகள் மருத்துவ துறையில் நீண்ட காலமாக தேக்கத்தில் இருந்தன. இந்த சூழல் கோவிட் காலத்தில் மாறத் தொடங்கியது.
கோவிட் தடுப்பூசி கண்டறிந்த பின்னர் பல நாடுகளில் மருத்துவத் துறை ஆராய்ச்சியில் நம்பிக்கை ஏற்பட்டது. அவர்களும் உந்துதலில் நிறைய ஆராய்ச்சியில் ஈடுபட்டு பல நோய்களுக்கு தடுப்பூசி கண்டறியும் முடிவில் இருக்கின்றனர். இதில் ஏற்பட்ட முன்னேற்றம் எச்.ஐ.வி நோய்க்கும் மருந்து கண்டுபிடிக்க உத்வேகமாக இருந்துள்ளது.
இப்போது நோய்க்கு மருந்து கண்டறிய முடியாவிட்டாலும் தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் தான் இந்த தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து (FDA) நிர்வாகம் லெனாகாபாவிர் என்ற தடுப்பூசியை அங்கீகரித்துள்ளது. இந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்ட நபரை 6 மாதங்கள் வரை எச்.ஐ.வி நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மை கொண்டது. இது ஒரு வருமுன் காக்கும் தடுப்பு மருந்தே தவிர சிகிச்சை முறை அல்ல. ஏற்கனவே எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இந்த ஊசியால் எந்த பலனும் இல்லை.
இந்த ஊசி ஒப்புதலுக்கு மூன்று சோதனைகள் இதில் நடத்தப்பட்டன. இந்த ஊசியைப் செலுத்திக் கொண்ட பெண்கள் எச்.ஐ.வி வைரஸிலிருந்து 100% பாதுகாக்கப்பட்டனர். இந்த ஊசியை செலுத்திக் கொண்ட ஆண்களில் 0.1% பேர் மட்டுமே எச்.ஐ.வி நோயால் தாக்கப்பட்டனர். ஒருவர் லெனகாபாவிர் ஊசியை செலுத்திக் கொண்டால் 6 மாதங்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கும், அதன் பின்னர் மீண்டும் அதே ஊசியை செலுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் எச்.ஐ.வி பரிசோதனை செய்ய கொள்ள வேண்டும். இந்த ஆராய்ச்சி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் இதழில் வெளியிடப்பட்டது.