இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி.! சச்சின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு.!

Sachin Tendulkar - Vaibhav Suryavanshi
Sachin Tendulkar - Vaibhav Suryavanshi
Updated on

ஐபிஎல் தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக வருகின்ற ஜூன் மாதம் அயர்லாந்துக்கு எதிரான இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் வைபவ் சூர்யவன்ஷியை சேர்க்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஐசிசி விதிமுறைப்படி 15 வயதைக் கடந்து விட்டால் சர்வதேச போட்டிகளில் விளையாடலாம். கடந்த மார்ச் 27ஆம் தேதியுடன் 15 வயதை கடந்த வைபவ் சூர்யவன்ஷிக்கு, இனி இந்திய அணில் விளையாடுவதற்கு எந்தத் தடையும் இருக்காது.

இந்நிலையில் வருகின்ற ஜூன் மாதம் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: காலையிலேயே இன்ப அதிர்ச்சி - ஓட்டு கேட்டு வீட்டிற்கே வந்த முதல்வர்.!
Sachin Tendulkar - Vaibhav Suryavanshi

ஒருவேளை சூர்யவன்ஷி அயர்லாந்துக்கு எதிரான தொடரில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானால், மிக இளம் வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான வீரர் என்ற சாதனையைப் படைப்பார். அதோடு 16 வயதில் அறிமுகமான சச்சினின் சாதனையையும் அவர் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிரடியான ஆட்டத்தால் அனைவரது கவனத்தையும் ஈர்த்த வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணிக்கு பலம் சேர்ப்பார் எனக் கூறப்படுகிறது.

வருகின்ற ஜூன் 26-ல் அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியும், ஜூன் 28-ல் இரண்டாவது டி20 போட்டியும் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
#JUST IN: அமெரிக்கா - ஈரான் போர்.! மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் தயாராகும் டிரம்ப்..?
Sachin Tendulkar - Vaibhav Suryavanshi
logo
Kalki Online
kalkionline.com