#BREAKING: காலையிலேயே இன்ப அதிர்ச்சி - ஓட்டு கேட்டு வீட்டிற்கே வந்த முதல்வர்.!

2026 election campaign
MK Stalin
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

திமுகவின் கே.வி.குப்பம் தொகுதி வேட்பாளர் ராஜேஸ்வரியை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இதையும் படியுங்கள்:
#JUST IN: "உதயநிதி ஸ்டாலின் முதல்வராக மாட்டார்" பியூஸ் கோயல் அதிரடி கருத்து.!
2026 election campaign

தமிழ்நாடு முழுக்க பிரச்சாரங்களை நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அவ்வப்போது காலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போதும், மெட்ரோ பயணத்தின் போதும் பொதுமக்களை சந்தித்து நேரடியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அவ்வகையில் இன்று வேலூரில் காலை நடைபயிற்சி மேற்கொள்ள செல்லும்போது, வீடு வீடாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து கே.வி.குப்பம் தொகுதி வேட்பாளர் ராஜேஸ்வரிக்கு ஆதரவு திரட்டி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.

திடீரென தமிழக முதல்வர் வீட்டிற்கு வருகை புரிந்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

இதையும் படியுங்கள்:
#JUST IN: வீடு தேடி வரும் பூத் ஸ்லிப்! தேர்தல் ஆணையத்தின் மெகா அப்டேட்.!
2026 election campaign
logo
Kalki Online
kalkionline.com