காமராஜர் பிறந்த தினத்தில் வைரலாகும் கவிஞர் வைரமுத்துவின் வாழ்த்துக்கவிதை !

Kamarajar
Kamarajar
Published on

காமராசரின் பிறந்தநாளான இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், காமராசரின் பிறந்தநாளையொட்டி, கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

''படிக்காத காமராசர், பள்ளிகள் செய்தார். வீடுகட்டாத காமராசர், அணை கட்டினார். புத்தகம் எழுதாத காமராசர், நூலகம் திறந்தார். கையில் காசுவைத்துக்கொள்ளாத காமராசர், ஏழைத் தமிழர்களை ஈட்டச் செய்தார் .

இதையும் படியுங்கள்:
மதிய உணவு திட்டம்: நாட்டுக்கு வழிகாட்டிய கர்மவீரர் ‘காமராஜர்’
Kamarajar

மற்றவர்க்கு நாற்காலி தந்து தன் பதவி தான்துறந்தார். கருப்பு காந்தி என்று அழைக்கப்பட்டாலும் காந்தி காணாத துறவறம் பூண்டார். காமராசர் நினைக்கப்பட்டால் அறத்தின் சுவாசம் அறுந்து விடவில்லை என்று பொருள். காமராசர் மறக்கப்பட்டால் மழையே தண்ணீரை மறந்துவிட்டது என்று பொருள் நான் உங்களை நினைக்கிறேன் ஐயா'' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com