விலங்குகளுக்காக ஒரு பல்கலைக்கழகமா? - உலகின் கவனத்தை ஈர்க்கும் ஆனந்த் அம்பானியின் புதிய முயற்சி!

ஆனந்த் அம்பானி, குஜராத்தின் ஜாம்நகரில் உலகின் முதல் ஒருங்கிணைந்த "வந்தரா பல்கலைக்கழகத்தை" (Vantara University) தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
Vantara university
Vantara university image credit-vantara.in
Published on

இந்தியாவின் முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரானும், முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி, குஜராத்தின் ஜாம்நகரில் உலகின் முதல் ஒருங்கிணைந்த "வந்தரா பல்கலைக்கழகத்தை" (Vantara University) தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஆனந்த் அம்பானியின் 31-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரும், அவரது மனைவி ராதிகாவும், அவரது தந்தையும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானியும் இணைந்து இப்பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல்லை நாட்டினர்.

ஆனந்த் அம்பானி வெளியிட்ட அறிக்கையில், "பாதுகாப்பு முயற்சிகளின் எதிர்காலமானது, உயிரினங்களுக்குக் கருணை, அறிவு மற்றும் திறமையுடன் சேவையாற்றக்கூடிய வகையில், நாம் மனித மனங்களையும் நிறுவனங்களையும் எவ்வாறு தயார்படுத்துகிறோம் என்பதையே சார்ந்திருக்கும். விலங்குகளின் பராமரிப்புத் துறையில் கூடுதல் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கான தேவை தற்போது உள்ளது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வனவிலங்குகளை பாதுகாத்து இயற்கை வழித்தடத்தை ஒத்த சூழலில் அவற்றை பராமரிப்பதே வந்தாராவின் முக்கிய நோக்கம் என்று ஆனந்த் அம்பானி கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
வந்தாரா சரணாலயத்திற்குள் என்ன நடக்கிறது? ஆனந்த் அம்பானி மீது தொடரும் குற்றச்சாட்டுகள்!
Vantara university

இந்த உலகளாவிய நிறுவனம் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் கால்நடை அறிவியல் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, இந்தியாவின் பாரம்பரிய அறிவு மற்றும் நவீன அறிவியலை ஒன்றிணைத்து நிபுணர்களை உருவாக்கும்.

இது வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் கால்நடை அறிவியலுக்கான அர்ப்பணிக்கப்பட்ட உலகின் முதல் ஒருங்கிணைந்த உலகளாவிய பல்கலைக்கழகமாகும். இது வனவிலங்கு பாதுகாப்பு, கால்நடை மருத்துவம் மற்றும் கவனிப்பு, மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

இதன் பாடத்திட்டமானது பாரம்பரியங்களை தழுவி எதிர்காலத்தை நோக்கிய கல்வி மாதிரியை வடிவமைக்கும் வகையில் இருக்கும். துன்பத்தில் இருக்கும் விலங்குகளை கண்டுபிடித்து அவற்றை பராமரிப்பதில் மேம்பட்ட திறன் தேவை என்ற உணர்வு தான் வந்தாரா பல்கலைக்கழகம் உருவாக காரணமாக அமைந்தது என்றார்.

வந்தாரா பல்கலைக்கழகம் நிஜ உலக பாதுகாப்பு நடைமுறைகளை அடிப்படையாக கொண்டு பல்வேறு துறைகளை ஒரே கல்விக் சூழலில் இணைக்கும். இந்த பல்கலைக்கழம் கள அறிவை கல்வித் திட்டங்களாகவும், தொழில்முறை பயிற்சியாகவும் மற்றும் உலகளாவிய அளவில் பொருத்தமான கட்டமைப்புகளாகவும் மாற்றும். கருணை, அறிவியல் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம், வனவிலங்கு மற்றும்சுற்றுசூழலில் ஏற்படும் சிக்கலான சவால்களை எதிர்கொள்ளும் வகையில் திறன்மிக்க வல்லுநர்களை இது உருவாக்கும்.

சமூக மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த மாணவர்களுக்கு, பல்கலைக்கழகம் கல்வி உதவித்தொகைகளை வழங்கும் என்று 'வந்தாரா' தெரிவித்தது. இது ‘Vantara University Founding Fellows’ மற்றும் ‘Every Life Matters’ ஆகிய உதவித்தொகைத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது.

வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சூழல் மண்டல மேலாண்மை ஆகிய துறைகளில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றிற்கான ஒரு நீண்டகால தளமாகவே இப்பல்கலைக்கழகம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக 'வந்தாரா' தெரிவித்தது.

சமீபத்தில் தனது முதல் ஆண்டை நிறைவு செய்துள்ள இந்த வனவிலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம், 3,500 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ளதோடு, சுமார் 1,50,000 விலங்குகளுக்குப் புகலிடமாகவும் திகழ்கிறது.

ஆனந்த் அம்பானியின் 'வந்தாரா' முயற்சியின் மூலம் இந்த பல்கலைக்கழகம், வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் கவனிப்பில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சலங்பூர் அனுமன் கோவிலில் கோசாலை கட்ட ரூ.10 கோடி நிதி வழங்கிய அனந்த் அம்பானி..!
Vantara university

ஆனந்த் அம்பானி இந்த மாத தொடக்கத்தில் மேற்கொண்ட கேரள பயணத்தின் போது, கேரளாவின் புகழ்பெற்ற தலிப்பரம்பாவில் உள்ள ராஜராஜேஸ்வரம் கோவிலுக்கும், குருவாயூரில் உள்ள குருவாயூர் கோவிலுக்கும் தலா 3 கோடி ரூபாய் வீதம் மொத்தம் 6 கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com