varisu
varisu

`வாரிசு' இசை வெளியீட்டு விழா! தயாரிப்பு நிறுவனத்துக்கு அபராதம் !

Published on

விஜயின் 'வாரிசு' திரைப்பட தயாரிப்பு நிறுவனத்துக்கு அபராதம் விதிக்க நேரு விளையாட்டு அரங்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று `வாரிசு' இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இசையமைப்பாளர் தமன், ராஷ்மிகா மந்தானா, இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷ்யாம் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு. இவர்களுடன் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் - ஷோபாவும் கலந்து கொண்டுள்ளனர்.

ரசிகர்களின் கவுன்டவுனுடன் அரங்கில் நுழைந்தார் நடிகர் விஜய். விழா அரங்கைச் சுற்றி வந்து ரசிகர்களுக்கு கையசைத்து உற்சாகமூட்டினார். அதைத் தொடர்ந்து விஜய் திரையுலகுக்கு வந்து 30 வருடங்கள் ஆனதைக் கொண்டாடும் வகையில் விழா மேடையில் சிறப்பு இசை நிகழ்வு ஒன்றும் நடத்தப்பட்டது.

விஜய்
விஜய்

பிக் பாஸ் ராஜுவும், விஜய் டிவி ரம்யாவும் தொகுத்து வழங்கும் இந்த இசை வெளியீட்டு விழாவில் முதல் பாடலாக ஒலித்தது 'வா தலைவா' பாடல். பாடகர்கள் சங்கர் மகாதேவன், கார்த்திக், ட்ரம்ஸ் சிவமணி, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்டோர் இணைந்து மேடையில் இந்தப் பாடலைப் பாடினர்.

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான இப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது. ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்தன.

பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

அப்போது ரசிகர்கள் சிலர் உற்சாக மிகுதியில் அதிகப்படியான இருக்கைகளை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. இதனால், வாரிசு பட தயாரிப்பு நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளதாக, நேரு உள்விளையாட்டு அரங்க பொறுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேதம் குறித்த கணக்கெடுப்பு நடத்திய பின், தயாரிப்பு நிறுவனத்திடம் உரிய அபராதம் வசூலிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com