
சமீபத்தில் நடைபெற்ற வாரிசு பட ஆடியோ வெளியீட்டு விழாவில், பேசிய படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூவும், நடிகர் சரத்குமாரும், விஜயை சூப்பர் ஸ்டார் என்று வர்ணித்தார்கள். அதே போல் பத்திரிகையாளர் பிஸ்மியும் கூறியிருந்தார். அது பல தரப்பிலும் பல்வேறு சர்ச்சையை கிளப்பியிருந்தது. அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினியா/ அல்லது விஜயா? என்கிற விவாதம் பட்டி தொட்டி எங்கும் சூடு பிடிக்கத் தொடங்கியது. “எனக்கு நான்தான் போட்டி” என்று அந்த ஆடியோ விழாவில் விஜய் கூறி இருந்தது பரபரப்பை கிளறியது.
நேற்று நடைபெற்ற வாரிசு ட்ரைலர் வெளியிட்டு விழாவில் தன்னை சூப்பர் ஸ்டார் என்று சரத்குமாரும், தில் ராஜூவும் கூறியதை விஜய் மறுத்து பேசுவார் என்று பலதரப்பிலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய் பேசும் போது அது குறித்து எதுவும் பேசவில்லை. அத்தோடு அதனை மறுத்தும் பேசவில்லை. இந்நிலையில் வாரிசு பட ட்ரைலர் நேற்று வெளியிட பட்டது.
அதில் ட்ரைலர் முழுவதுமே பன்ச் டயலாக்குகளால் நிரம்பி வழிந்தது எனலாம். இந்த பன்ச் படத்துக்காக வைக்கப்பட்டதா? அல்லது இது வேறு யாருக்கான செய்தியா? என திரையுலகினரும் ரசிகர்களும் குழம்பி போயுள்ளனர்.
இதில் கீழ்கண்ட எல்லா 'பன்ச்' வசனங்களையும் விஜய் ஸ்டைலாக திரையில் தோன்றி பேசியுள்ளார்.
“அம்மா…எல்லா இடமும் நம்ம இடம்தான்”
”பவர் சீட்டுல இல்ல சார் அதுல வந்து ஒருத்தன் உட்காரான்ல அவன்கிட்டதான் இருக்கும்..நாம இந்த ரகம் ”
”நீ என்னை தாண்டி எங்கோ போயிட்டடா”
”அன்போ அடியோ எனக்கு கொடுக்கும்போது கொஞ்சம் யோசிச்சு கொடுக்கனும், ஏன் சொல்லு?… நீ எதைக் கொடுத்தாலும் அதனை நான் டிரிபுளா திருப்பிக் கொடுப்பேன்”
”கிரவுண்ட் மொத்தமும் உன் ஆளுங்க இருக்கலாம். ஆனால் ஆடியன்ஸ் ஒருத்தரத்தான் பார்ப்பாங்க...கேள்வி பட்டிருக்கியா...ஆட்டநாயகன்.
இந்த 'பன்ச்' வசனங்கள் தற்போது விவாத பொருளாகவும் பேசு பொருளாகவும் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.