இந்த முதலமைச்சருக்கு வாஸ்துதான் உயிர் மூச்சு!

இந்த முதலமைச்சருக்கு வாஸ்துதான் உயிர் மூச்சு!

ஒன்று பட்ட ஆந்திர மாநிலத்திலிருந்து தெலுங்கானாவை தனி மாநிலமாகப் பிரிக்க வேண்டும் என்று போராடி, வெற்றி பெற்று, தெலங்கானா மாநிலம் உருவாவதற்கு முழு முதல் காரணமானவர் தற்போதைய தெலங்கானாவின் முதலமைச்சராக இருக்கும் சந்திர சேகர ராவ்.

அவரால், தனது தாய் மாநிலமான ஆந்திராவிலேயே காலூன்ற முடியவில்லை. ஆனாலும், அவருக்கு அகில இந்திய அரசியலில் மிகுந்த ஆர்வம் உண்டு. தன் தலைமையில் பா.ஜ.க., காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி ஒன்றை உருவாக்க வேண்டும் என்று சில காலமாக முயற்சி செய்து வருபவர். ஆகவேதான், தெலங்கானா ரஷ்டிர சமிதி என்ற தனது கதியின் ஒரிஜினல் பெயரைக் கூட “ பாரத் ராஷ்டிர சமிதி” என மாற்றினார்.

தெலங்கானாவுக்கு வெளியில் தனது கட்சியைக் காலூன்றச் செய்வதற்கு அவர் பெரிதும் முயற்சிக்கிறார் என்பது ஒரு பக்கம் என்றால், டெல்லியில் தனது கட்சிக்கு ஒரு அலுவலகம் இருக்கவேண்டும் அப்போதுதான் தேசியத் தலைவர்கள் பார்வை தன் மீது படும் என்பது இவரது நம்பிக்கை.

இதற்காக அவர் என்ன செய்திருக்கிறார் தெரியுமா?

தலைநகர் டெல்லியில் வசந்த் விஹார் பகுதியில் தனது கட்சி அலுவலகத்துக்காக ஒரு பெரிய கட்டிடம் கட்டி, இருக்கிறார். இந்த நான்கு மாடிக்கட்டிடம் பதினோராயிரம் சதுர அடி கொண்டது. சந்திர சேகர ராவ், வாஸ்து சாஸ்திரத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் என்பதால், வாஸ்து நிபுணர்களைக் கலந்தாலோசித்து இந்த புதிய கட்டிடம் முழுக்க, முழுக்க வாஸ்து சாஸ்திர அடிப்படையில் கட்டி இருக்கிறார்.

அண்மையில் அந்தக் கட்டிடத்தை வாஸ்து சாஸ்திர நிபுணர் குறித்துக் கொடுத்த தினத்தில், வேத மந்திரங்கள் ஒலிக்க, சரியாகப் பகல் ஒரு மணி ஐந்து நிமிடத்துக்கு, ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார் ராவ். ரிப்பன் வெட்டிய கையோடு, வாஸ்து நிபுணரது ஆலோசனைப்படி தனது வலது காலை எடுத்து வைத்து, உள்ளே நுழைந்தார்.

டெல்லியில் புதிய அலுவலகம் திறந்த வேளை, வரும் சட்ட மன்றத் தேர்தலில் மட்டும் இல்லாமல் பாராளுமன்றத் தேர்தலிலும் உங்களுக்கு அமோக வெற்றி கிடைக்கும்” என்று திட்டவட்டமாகக் கூறி இருக்கிறார்களாம் அவருக்கு நெருக்கமான வாஸ்து எக்ஸ்பர்ட்கள்!

எல்லாம் வாஸ்து மயம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com