ஏப்ரல் 4ல் வேட்புமனு தாக்கல் செய்கிறார் விசிக கட்சித் தலைவர் திருமாவளவன்..!

திருமாவளவன்
திருமாவளவன்
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

வரும் 4ஆம் தேதி காட்டுமன்னார்கோவிலில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.

நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் திருமாவளவன் இந்த சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார்.

அதன்படி தற்போது வேட்புமனு தாக்கல் செய்வதற்கான தேதியை அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் 8 தொகுதிகள் விசிகவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்ற நிலையில் 8 தொகுதிகளில் இருக்கக்கூடிய வேட்பாளர்களும் தங்களுடைய வேட்புமனுவை ஏப்ரல் 4ஆம் தேதி தாக்கல் செய்ய இருக்கின்றார்கள் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஏப்ரல் 6ஆம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடையக்கூடிய நிலையில் ஏப்ரல் 4 அன்று தாக்கல் செய்ய உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: 5 லட்சம் பேருக்கு அரசு வேலை.! பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு.!
திருமாவளவன்
logo
Kalki Online
kalkionline.com