மிரட்டும் காலநிலை மாற்றங்கள்.... வறண்டு போன தண்ணீர் நகரமான வெனிஸ்!

வெனிஸ்
வெனிஸ்
Published on

வெனிஸில் சுற்றுலா தளங்களில் முக்கிய பங்கு வகிக்கும் கால்வாய்கள் காலநிலை மாற்றத்தால் வறட்சியடைந்து காணப்படுகிறது.

ஐரோப்பிய பிரியர்களுக்கு இத்தாலி ஒரு சொர்க்க பூமி. வடக்கு இத்தாலியின் வெனிட்டோ பிராந்தியத்தின் தலைநகர் வெனிஸ். உலகில் உள்ள எல்லா மனிதர்களும் தங்கள் வாழ்வினில் ஒருமுறையாவது தண்ணீர் நகரமான வெனிஸ் நகரின் படகில் உல்லாசமாக பயணிக்க வேண்டுமென விரும்புவர். சுற்றுலா துறைக்கு பெயர் போன நகரம் இது. தற்போது வறண்டு காணப்படுவதை சுற்றுலா பிரியர்களை காவலையில் ஆழ்த்தியுள்ளது.

வெனிஸ், அட்ரியாடிக் கடலில் உள்ள 100 க்கும் மேற்பட்ட சிறிய தீவுகளில் கட்டப்பட்டுள்ளது. இங்கு சாலைகள் இல்லை, கால்வாய்கள் மட்டுமே பிரதான போக்குவரத்துக்கு வழியாக உள்ளன. தினசரி அலுவலகம் செல்பவர்கள் முதல் சுற்றுலா பயணிகள் வரை அனைவரும் இந்த கால்வாய் வழியாகத்தான் பயணிப்பார்கள். அண்டார்டிகாவில் உள்ள பனிமலைகள், பனிப்பாறைகள் எல்லாம் வேகமாக உருகி வரும் செய்திகள் வந்துகொண்டு இருக்க வெனிஸ் நகரத்தில் உள்ள ஒரு ஆறு வறண்டு போய் கிடக்கிறது.

வடமேற்கில் உள்ள ஆல்ப்ஸ் மலையிலிருந்து அட்ரியாடிக் வரை ஓடும் இத்தாலியின் மிக நீளமான நதியான போ , இந்த ஆண்டின் தொடக்கத்தில் வழக்கத்தை விட 61% குறைவான பனிப்பொழிவையே பெற்றுள்ளது. அதனால் பொதுவாக முதன்மையான கவலையாக வெள்ளம் இருக்கும் வெனிஸ் நகரம், வழக்கத்திற்கு மாறாக நதியோட்டத்தில் குறைந்த அலைகளை எதிர்கொள்வதால், வறட்சியை எதிர்கொண்டு வருகிறது.

வெனிஸில் உள்ள பிரச்சனைகள் மழையின்மை, வறண்ட குளிர்கால வானிலை, உயர் அழுத்த அமைப்பு, முழு நிலவு மற்றும் கடல் நீரோட்டங்கள் போன்ற காரணிகளின் கலவையால் நிகழ்வதாக தெரிவிக்கின்றனர். ஆல்ப்ஸ் மலையின் இயல்பான பனிப்பொழிவு குறைவால் நீர்வரத்து குறைந்து கால்வாய்கள் வறண்டு விட்டதாக கூறுகின்றனர்.

காலநிலை மாற்றம் உலகில் உள்ள இயற்கையான பல நிகழ்வுகளை மாற்றி வருகிறது என்று பல அமைப்புகளையும் அறைகூவல் விடுத்து வருகின்றனர். ஆனால் அதன் தீவிர விளைவுகள் எல்லாம் தற்போது நிகழ் சாட்சியாக கண்முன்னே நடைபெறுகிறது .

சாலைகளை விட நதி போக்குவரத்தையே அதிகம் சார்ந்து இயங்கிக்கொண்டிருந்த வெனிஸ் நகரத்தில் இப்போது சிறு கால்வாய்கள் அனைத்தும் வறண்டு கிடப்பதால், வெனிஸ் நகரின் பல பகுதிகள் ஸ்தம்பித்து கிடக்கின்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com