
ஜெகதீப் தன்கர் ராஜினாமாவை தொடர்ந்து துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது.வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21, 2025 அன்று முடிவடையும்.
துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9-ந்தேதியன்று நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 9ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறுகிறது. செப்டம்பர் 9ம் தேதி தேர்தல் நடைபெற்று அன்றே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிடுவோர் ஆக. 7-ந்தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம். துணை ஜனாதிபதி தேர்தலில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் மக்களவை உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்று துணை ஜனாதிபதியை தேர்வு செய்வர்.