கேக்குறதுக்கு ஆள் இல்லை நினைசீங்களா..? இந்த விஜய் வந்து நிப்பான்..இந்த விஜய் கேள்வி கேட்பான்..! விஜய் சூளுரை..!

Thalapathy Vijay
Thalapathy Vijay
Published on

ஈரோட்டில் இன்று தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பை நடத்தினார். இதற்காக இன்று காலை விஜய் கோவை வந்தார். பின்னர் ஈரோடுக்கு புறப்பட்டு சென்றார். ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே, சரளை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நடக்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

காலை 8 மணி முதல் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்குள் தொண்டர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டிருந்த நிலையில் முன்பாகவே அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் விஜய் பேசியதாவது,

மஞ்சள்...மஞ்சள்... பொதுவா நல்ல காரியம் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னதை மஞ்சள் வெச்சு தான் ஸ்டார்ட் பண்ணுவாங்க... நம் வீட்டில் கூட நம் அம்மாக்கள் தங்கைகள் நமக்காக நாம நல்ல இருக்கனும் என்பதற்காக மஞ்ச புடவையை கட்டிக்கிட்டு தான் வேண்டிகுவாங்க...அப்படி அந்த மஞ்சள் நாளே ஒரு தனி VIBE தாங்க.நம்ம கொடில கூட அந்த VIRANT ஆன ENERGETIC ஆன மஞ்சள் இருக்குமே அந்த மாறி மங்கள கனமான மஞ்சள் விலையுற பூமி தான் இந்த ஈரோடு பூமி .இங்க வந்து மஞ்சளை பத்தி பேசாம வேற எங்க பேசுறது.ஈரோடு விவசாயத்திற்கு உறுதுணையாக இருப்பது காளிங்கராயன் அணை மற்றும் கால்வாய்.

வாழ்நாள் பூரா உங்களுக்கு நன்றியுடன் இருப்பேன்.பெத்த அம்மா கொடுக்கிற தைரியம் விட அதை தாண்டி எதுவுமே கிடையாது. ஒரு மனுஷனால எதையும் சாதிச்சு காட்ட முடியும். அப்படி ஒரு தைரியத்தை தான் இப்ப நீங்க என்னோட அம்மா அக்கா தங்கைகள் நண்பா நண்பிகள் தோழர்கள் எல்லோரும் கொடுத்து இருக்கீங்க அதே தைரியத்தை கூடவும் நிக்கறீங்க. இதை எப்படி பிரிச்சி விடலாம் இதை எப்படி கெடுக்கலாம் என்ன எல்லாம் நம்ம விஜய் மேல அவதூறு சொல்லலாம் என்ன எல்லாம் சூழ்ச்சி பண்ணலாம். இப்படி சூழ்ச்சியை மட்டும் நம்பி பொழப்ப நடுத்தர சில சூழ்ச்சி கார கூட்டங்கள் தொடர்ந்து செஞ்சிகிட்டு தான் இருக்கு.ஆன அவங்களுக்கு தெரியாது இது இன்னைக்கு நேத்து வந்த உறவு இலை 33 வருஷத்துக்கு மேல இருக்கிற உறவு.

நான் சினிமாக்கு வந்த போது என் வயசு 10. அப்போ இருந்து இந்த உறவு ஸ்டார்ட் ஆகி போயிட்டு இருக்குனு அவங்களுக்கு தெரியாது.இந்த விஜய்-ஐ இந்த விஜி -ஐ மக்கள் ஒரு போதும் கைவிட மாட்டாங்க. மக்கள் கூடவே நிப்பாங்கனு அவங்களுக்கு தெரியாம போச்சு.நல்ல விஷயத்தை செஞ்சிது கதை சொன்ன பரவாஇல்ல எதையும் பண்ணமா கதைகளை மட்டும் அடிச்சு விடுறது.வள்ளுவர் கோட்டத்திற்கு கொடுக்கிற அக்கறை இங்க மக்கள் வாழ்வாதாரத்தை மேல காட்டலாம்ல. இவங்க என்ன GOVERNMENT நடத்துறாங்களா...கண்காட்சி நடத்துறாங்களா...மக்களை பத்தி ஒண்ணுமே யோசிக்கிறது இல்ல...

அண்ணாவும் MGR-ம் தமிழ்நாட்டோட சொத்து அத பயன்படுத்த யாரும் இங்க COMPLAINT எல்லாம் பண்ண முடியாது.அண்ணா எங்களோடது MGR எங்களோடது நீங்க எல்லாம் எடுத்துக்க முடியாது என யாரும் சொல்ல முடியாது.நாங்க ஒரு வழில அரசியல் செஞ்சிட்டு போயிடு இருக்கோம்.உங்களுக்கு தான் tvk ஒரு பொருட்டே இல்ல தானே அப்புறம் ஏன் கதறுறீங்க.. ஏன் புலம்பி தள்ளிட்டு இருக்கீங்க. இது எப்படி இருக்கு தெரியுமா எனக்கு பயம் இல்ல எனக்கு பயம் இல்ல அப்படி சத்தமா பாடிகிட்டு சின்ன பசங்க மாதிரி நடுங்கிட்டு போற மாதிரி இருக்கு. மொதல்ல மண்டைல இருக்கிற கொண்டையை மறைங்க சார்.

உங்களுக்கு நீங்க கொள்ளை அடிச்சு வெச்சி இருக்கிற காசு தான் துணை ஆன எனக்கு எல்லை இல்ல பாசம் வெச்சு இருக்கிற மாஸ் தான் துணை. பெரியார் பெயரை சொல்லிக்கிட்டு தயவு செய்து கொள்ளை அடிக்காதீங்க பா .. தயவு செய்து...பெரியார் பெயர் சொல்லிட்டு கொள்ளை அடிக்குற இவங்க தான் நம்ம அரசியல் எதிரி.

ஈரோட்டில் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் தொண்டர் ஒருவர் இரும்பு கோபுரம் மீது ஏறி விஜய்யை நோக்கி முத்தம் கொடுக்க முயன்ற நிலையில், அதிர்ச்சியடைந்த விஜய் அவரை கீழே இருங்குமாறு அறிவுறுத்தினார். தொண்டரின் செயலை கண்டு ஒரு நிமிடம் நடுங்கிய விஜய், அவரை உடனே கீழே இறங்குமாறும், அதன் பிறகு முத்தம் தருகிறேன் என்றும் கூறினார். தொண்டர் கீழே இறங்கிய பின் பிரச்சார பஸ் மீது நின்றுகொண்டே கையை நீட்டி அன்பை வெளிப்படுத்தினார்.

  • எத்தனை எத்தனை பொய்யான வாக்குறுதிகள். வந்ததும் நீட் ரத்து செய்வோம். கல்வி கடனை ரத்து செய்வோம் கேஸ் சிலிண்டர் மானியம் 100 தருவோம் என சொன்னாங்களே..? செஞ்சாங்களா..?

  • இவங்க எப்பவும் இப்படி தான் சொல்றது ஒன்று செய்யுறது ஒன்னு. திமுகவும் பிரச்சனையும் fevicol போட்டு ஓட்டுன பிரண்ட்ஸ் மாதிரி ஒன்னுல இருந்து ஒன்ன பிரிக்கவே முடியாது.

  • இப்போ ஈரோடு பக்கம் இருக்கிற பிரச்னையை பத்தி பேசுவோம்

  • மஞ்சள் நகரத்திற்கும் ஒன்னும் பண்ணல.. மஞ்சள் விவசாயிகளுக்கும் ஒன்னும் பண்ணல இது வரைக்கும் என்ன செஞ்சி இருக்காங்கனு பார்த்தா ஒரு பெரிய ஸிரோ தான்..கரும்புக்கு அரசாங்கம் விலை நிர்ணயம் பண்றாங்க அதுலயும் பல பிரச்சனை. நெல் கொள்ளுதல் செய்யுறதுல ஊழல்.

  • 24 /7 அவங்க யோசனை என்ன தெரியுமா இந்த விஜய்யை எப்படி முடக்கலாம். தமிழக வெற்றி கழகத்தை எப்படி எல்லாம் முடக்கலாம். அப்படி தான் அவங்களோட சிந்தனையே

  • பவானி நொய்யல் ஆறு அமராவதி இணைப்பு திட்டத்திற்கு ஒரு துரும்பை கூட கிள்ளி போடல வாக்குறுதி நம்பர் 103 ..சொன்னீங்களே செஞ்சாங்களா..?

  • ஆறுகளை சுத்த படுத்த பல ஆயிரம் நிதி ஒதுக்குவோம்...ஆற்றை சுத்த படுத்துவோம் சொன்னாங்களே செஞ்சாங்களா..? ஆன ஆற்று மணல் கொள்ளையை மட்டும் சரியா செய்வாங்க.

  • கொஞ்சம் அசந்தா பல மாவட்டங்களில் மணல் காணாமல் போன மாதிரி மழை காணாமல் போன மாதிரி நம் ஈரோடு மாவட்டத்தில் இருக்கிற செம்மண் காணாமல் போக வாய்ப்பு இருக்கு மக்களே...நம் மண்ணுக்கும் நம் விவசாயிகளுக்கும் தான் இந்த மோசமான நிலைமை.

  • நம்மளும் கத்துறோம் போராடுறோம் இவங்க ஏதாவது கண்டுக்கிறாங்களா. கொஞ்சம் யோசிங்க...

  • ஒவ்வொரு மாவட்டத்திற்கும் போய் மக்கள் பிரச்சனை பேசிட்டு வரேன்.. இது அரசியல் இல்லையா..? அப்ப எது அரசியல்.. உங்கள மாதிரி தனிப்பட்ட முறையில் தரக்குறைவா அசிங்க அசிங்கமா பேசுறது தான் அரசியல்னா அந்த அரசியல் நமக்கு வராது. வராதுனா...... நல்லாவே வரும் உங்களை விட எனக்கு நல்லாவே வரும்.. வேணாம்னு விட்டு வெச்சி இருக்கோம். அப்ப உங்களுக்கு நமக்கும் என்ன வித்தியாசம்.

  • காஞ்சிபுரத்துல நாங்க சொன்னது எல்லாம் தப்பு தப்பா புரிஞ்சிகிட்டு இப்ப சொல்றேன் நான் சலுகைகளுக்கு எதிரானவன் கிடையாது,மக்களுக்கான சலுகைகளை இலவசம் என சொல்றதுல எனக்கு உடன்பாடு கிடையாது.

  • மக்கள் காசுல மக்களுக்கு செய்யுறதுல எப்படி இலவசம் சொல்லுவீங்க. அப்படி கொடுத்தது ஓசி ல போறேன் ஓசி ல போறேன் அசிங்க படுத்துறீங்க .என்ன கேக்குறது ஆள் இல்லை நினைசீங்களா

  • மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்..இந்த விஜய் கேள்வி கேட்பான்.

  • திமுக ஒரு தீயசக்தி; தவெக ஒரு தூய சக்தி. தீய சக்தி திமுகவுக்கும், தூய சக்தி தவெகவுக்கும் இடையே தான் போட்டியே. மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்த மக்கள் மக்கள் சக்திமிக்க நம்மால் தான் முடியும் என பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com