#BREAKING : கடலூரில் அனுமதி அளித்த நிலையில் பிரச்சாரத்தை ரத்து செய்தார் தவெக தலைவர் விஜய்..!!

VIJAY
VIJAY Image source: oneindia
Published on

புதுச்சேரி வாக்காளர் பெருமக்களே இன்னும் சில மணி நேரங்களே உள்ளன வாக்குப்பதிவு நிறைவுற போகும் கடைசி மணித்துளி வரை விழிப்புடன் இருக்குமாறு தவெக தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். விழிப்புடன் இருந்து உங்கள் வாக்குகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் விஜய் வலைதள பதிவுகளில் கூறியுள்ளது சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் கவனம் பெற்று வரும் வேளையில் தற்போது தனது கடலூர் பிரச்சாரத்தை ரத்து செய்தது தமிழ்நாட்டில் தவெக நிலை குறித்து மக்களிடம் கேள்விக்குறி எழுப்பும் வகையில் உள்ளது.

தூத்துக்குடி , நெல்லையில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து நேற்று கட்டுக்கடங்காத தனது ரசிகர்கள் கூட்டத்தில் திமுகவைத் தாக்கி தனது பரப்புரையை நிகழ்த்தி ரோடுஷோவும்  சென்ற விஜய்  இன்று செல்ல இருந்த தனது பிரச்சாரத்தை ரத்து செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வாரம் சென்னை பிரச்சாரத்துக்கு அனுமதி அளித்தும் நேர கட்டுப்பாடு விதித்ததாக காரணம் கூறி பிரச்சாரத்தை ரத்து செய்த நிலையில்  இந்த முறை தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வமாக அனுமதி வழங்கிய பிறகும் கடலூர் பிரச்சாரத்தை ரத்து செய்து இருக்கிறார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. சாலை மார்க்கமாக கடலூருக்கு செல்வதால் அதில் ரசிகர்கள் சூழும் சிக்கல் இருப்பதால் கடலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கிய பிறகும் தனது பிரச்சாரத்தை ரத்து விஜய் செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவல்துறை அனுமதிக்கப்பட்ட இடத்தில் பிரசாரம் மேற்கொள்ளலாம் என்றும், ரோடு ஷோ நடத்தக்கூடாது என்றும் தெரிவித்து அனுமதி அளித்தது.இதையடுத்து தான் கடலூர் பிரச்சாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை பிரச்சாரத்தை போல கடலூர் பிரச்சாரமும் ரத்து என்ற செய்தி விஜயைக் காண ஆவலாக இருந்த கடலூர் ரசிகர்கள் ,தொண்டர்கள் மற்றும் கட்சியினருக்கு பெருத்த ஏமாற்றம் தருகிறது என்கின்றனர். இருப்பினும் கடலூரில் இன்றைக்கு பதிலாக வரும் சனிக்கிழமை விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டம்  எனவும் எதிர்பார்ப்பு உள்ளதாக தெரிகிறது. 

தேர்தலுக்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே இருப்பதால் விஜய் தினந்தோறும் பிரச்சாரம் செய்வாரா?  எனும் எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகுமா எனும் கவலையில் தவெக தொண்டர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
#JUST IN : வாக்குச்சாவடியில் பாஜக, காங் கைகலப்பு - போலீஸ் தடியடி நடத்தியதால் புதுச்சேரியில் பரபரப்பு!
VIJAY

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com