#BIG BREAKING : வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் தவெக தலைவர் விஜய்!

TVK Vijay
TVK Vijay
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான தவெக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய் சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.

புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வரும் ஏப்ரல் 9ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான மனு தாக்கல் கடந்த 16ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நாளை திங்கட்கிழமையுடன் வேட்பு மனுதாக்கல் நிறைவடைகிறது. நாளை ஒரு

நாள் மட்டுமே மனு தாக்கலுக்கு அவகாசம் உள்ளது. இந்த நிலையில் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதில், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேருக்கும், ஒரு முன்னாள் அமைச்சருக்கும், சுயேச்சை எம்.எல்.ஏ. ஆக வெற்றி பெற்ற பிரகாஷ் குமார் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.மேலும், 30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இரண்டு தொகுதிகளுக்கு பெண்களை வேட்பாளர்களாக அறிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய்

logo
Kalki Online
kalkionline.com