ஸ்டாலின் சார்.. இது நாடா இல்ல காடா? - பெரம்பூர் மேடையில் சீறிய 'தளபதி' விஜய்!

vijay
vijay
Published on

தமிழக சட்டசபை தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. முதல்முறையாக தேர்தல் களம் காணும் தவெக நேற்று 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த தவெக தலைவர் விஜய் இன்று பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். இன்றைய தினமே அனைத்து தவெக வேட்பாளர்களையும் வேட்புமனு தாக்கல் செய்ய அவர் கூறியிருந்தார். அதன்படி வேட்பாளர்கள் 234 பேரும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும். தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யப்படவுள்ளது. 

பெரம்பூர் தொகுதியில் போட்டியிட உள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் செய்தார் தவெக தலைவர் விஜய். சென்னை பெரம்பூர், திருச்சி(கிழக்கு) என இரு தொகுதிகளில் போட்டியிடும் விஜய் வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர் பிற்பகல் 2 மணி அளவில் பெரம்பூரில் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.கொளத்தூரில் வேட்புமனுத் தாக்கல் செய்த கையுடன் பிரச்சாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கினார். அதேபோல் வேட்புமனுத் தாக்கல் செய்த கையோடு பிரச்சார வேனில் ஏறி புறப்பட்டார் விஜய். பெரம்பூர் தொகுதியில் இருந்து இன்று பிரச்சாரத்தை தொடங்கும் விஜய் வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனாவை ஆதரித்து பிரச்சாரமும் செய்ய உள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நீலாங்கரை வீட்டிலிருந்து புறப்பட்டு தேர்தல் அலுவலகத்திற்குச் செல்லும் வழி நெடுகிலும் உள்ள ரசிகர்களுக்கு கை அசைத்த விஜய், சிக்னலில் விஜய் கார் நின்ற நிலையில் வாகன ஓட்டிகள் கீழே இறங்கி புகைப்படம் எடுக்க முயன்றனர். விஜயை பார்த்ததும் ஃப்ளையிங் கிஸ்ஸை பறக்க விட்ட இளைஞர்கள் என விஜய்க்கு அமோக வரவேற்பு கிடைத்தது.வேட்புமனு தாக்கல் செய்த கையோடு ஏற்கனவே அறிவித்திருந்தபடி தேர்தல் பரப்புரை பயணத்தை  தொடங்கியுள்ளார் விஜய். 

வேட்பு மனு தாக்கல் செய்ய வியாசர்பாடியில் உள்ள தேர்தல் அலுவலகத்துக்கு வந்த விஜய், தேர்தல் அலுவலர் கீதாவிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெக இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

அங்கிருந்து பிரச்சாரத்தில் ஈடுபட பிரச்சார வாகனத்தில் பெரம்பூர் கிளம்பினார் அவரது வருகை காரணமாக பெரம்பூரில் ஏராளமான பிரிந்து இருந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

விஜய் வருகையால் ஸ்தம்பித்த பெரம்பூர் பகுதி. பிரச்சாரத்துக்கு செல்லும் வழியை ரோடு ஷோவாக மாற்றிய அலைகடலென திரண்ட மக்கள். தமிழ்நாட்டில் எங்கிருந்து என்றாலும் நம் பெரம்பூர் தொகுதியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்க வேண்டும் என்று முடிவு பண்ணியே இங்கு பிரச்சாரத்தை தொடங்குவதாக தெரிவித்தார்.

உங்கள் விஜய் நம் பெரம்பூர் தொகுதியில் இருந்து நம்ம பிரச்சாரத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவு பண்ணினேன். வட சென்னையில் மிகப்பெரிய அடையாளமாக இருக்கிற அன்னை சர்ச், பிரசன்ன லட்சுமி நரசிம்மர் கோவில், பல புகழ்பெற்ற மசூதிகள் இருக்கிற பெரம்பூர் தொகுதியில் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறோம் என்று பேச்சைத் தொடர்ந்தார்.

இது நாடா இல்லை காடா என்று ரைமிங்காக பேசி அட்டாக் செய்த விஜய். பெண்கள் பாதுகாப்பு இல்லாத, சட்டம் ஒழுங்கு சரியில்லாத, போதைப் பொருள் அதிகமாக இருக்கிற நம்ம தமிழ்நாட்டை நாம் காப்பாற்றி ஆக வேண்டும். தமிழ்நாட்டை இப்படி ஒரு நிலைமைக்கு கொண்டு வந்தது யார் என்பதை நான் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. தீய சக்தி திமுக தான் காரணம். இப்படி ஒன்றுக்குமே உதவாத ஆட்சியை நடத்தி விட்டு விரைவில் விடை பெறப் போகும் ஸ்டாலின் சார் தான் காரணம். இந்த 5 வருஷத்துல ஆட்சி நடத்தினார்களா இல்லை வேறு ஏதாவது நடத்தினார்களா? ஒரு அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் எப்படி இருப்பது.வட சென்னையில் அடிப்படை கட்டமைப்புகள் எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் பாட்டி வயது உள்ளவர்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை. டீக்கடையில் டீ குடிப்பவர்களைக் கூட போதையில் வந்து வெட்டிச் செல்கின்றனர். இது நாடா இல்லை காடா. கவர்மெண்ட் என்று ஒன்று இருக்கிறதா இல்லையா? ஒரு அஞ்சு வருஷம் போலீஸ் டிபார்ட்மெண்ட்டை கையில் வைத்திருக்கிற, ஒரு அடிப்படை பாதுகாப்பைக் கூட கொடுக்க முடியாத இந்த ஆட்சி, இந்த அதிகாரம் எதற்கு? இந்த தீய சக்தி திமுக ஆட்சியில் பாதுகாப்பு உள்ளதா? குழந்தைகளுக்கு பாதுகாப்பு உள்ளதா? இந்த தீய சக்தி திமுக ஆட்சியில் நீங்கள் நிம்மதியாக இருக்கிறீர்களா? ஸ்டாலின் சாருக்கு மக்கள் எல்லாம் முக்கியம் கிடையாது. மக்களுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு இவை எதுவும் முக்கியம் கிடையாது. குடும்பத்தோடு சேர்ந்து கொள்ளை அடிப்பது தான் முக்கியம். நான் முன்பே சொன்னது மாதிரி டாஸ்மாக்கில் மட்டும் ஆயிரம் கோடி ஊழல். வெளியில் தெரிந்தது இது. தெரியாது எவ்வளவு இருக்கிறதோ? அதே மாதிரி நகராட்சி துறையிலும் ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல். இன்றைய இளைஞர்கள் படித்து வேலைக்காக எவ்வளவு அலைகிறார்கள் தெரியுமா? நகராட்சித் துறையில் வேலை வாங்கித் தருவதாக சொல்லி லஞ்சம் வாங்கிவிட்டு தகுதியானவர்களுக்கு வேலை இல்லாமல் பண்ணியிருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை. அதனால் தம்பி, தங்கைகளே உங்களுக்கான வேலை வாய்ப்பு இல்லாத இந்த ஸ்டாலின் அரசை தூக்கி எறிவோமா? உங்களுக்கு பாதுகாப்பில்லாத இந்த அரசை, வேலைவாய்ப்பிலலாத இந்த அரசை தூக்கி எறிவோமா. வண்டி வண்டியாக சேர்த்த பணத்தை இப்பொழுது வெற்றி பெறுவதற்காக உங்கள் எல்லாருக்கும் கொடுத்து எப்படியாவது ஜெயித்து விடலாம் என்று கனவு கண்டு கொண்டிருப்பார்கள். நான் முன்பே சொன்னது போல் எல்லாத்தையும் வாங்கிக்கோங்க. வாங்கிக்கிட்டு அவங்க காதிலேயே விசில் ஊதி அனுப்புங்க என்று ஆவேசமாக பேசினார்.


உங்களுக்காக உங்க விஜய் வசதியான வாழ்க்கை அனைத்தையும் உதறி தள்ளிட்டு உங்களுக்காக மட்டுமே வந்துள்ளேன். அனைத்து வழிகளையும் தாங்கிக் கொண்டு உங்களுக்காக நிற்கிறேன். எனத் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு.! பெரம்பூரில் விஜய்க்கு எதிராக பெண் வேட்பாளரை இறக்கி விட்ட அன்புமணி.!
vijay

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com