#BREAKING: பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு.! பெரம்பூரில் விஜய்க்கு எதிராக பெண் வேட்பாளரை இறக்கி விட்ட அன்புமணி.!

PMK Candidates
Anbumani
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று (மார்ச் 30) முதல் தொடங்குகிறது. தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், 18 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.

அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்துள்ள பாமக, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 18 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில், பாமக சார்பில் திலகபாமா போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

பாமக வேட்பாளர்கள்:

1. தருமபுரி - சௌமியா அன்புமணி

2. பெரம்பூர் - திலகபாமா

3. திருப்போரூர் - பாலு

4. சோளிங்கர் - சரவணன்

5. விக்கிரவாண்டி - சிவக்குமார்

6. மயிலாடுதுறை - சித்தமல்லி பழனிசாமி

7. சேலம் வடக்கு - சதாசிவம்

8. விருத்தாசலம் - தமிழரசி ஆதிமூலம்

9. உத்திரமேரூர்- மகேஷ்குமார்

10.ரிஷிவந்தியம்- செழியன்

11. காட்டுமன்னார்கோவில்- அன்பு. சோழன்

12. சேலம் மேற்கு- கார்த்தி

13.பென்னாகரம்- பாடி வெ.செல்வம்

14. போரூர்- சி.ஆர்.பாஸ்கரன்

15.ஜெயங்கொண்டம்- வைத்தி

இதையும் படியுங்கள்:
இனி பெட்ரோல் பங்குகளில் மண்ணெண்ணெய் கிடைக்கும்.! மத்திய அரசு அதிரடி.!
PMK Candidates

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 23 இடங்களில் போட்டியிட்ட பாமக, இம்முறை 18 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் தனிக்கட்சி தொடங்கி இருப்பதால், பாமகவிற்கு எதிர்பார்த்த வாக்குகள் கிடைக்குமா என்பதிலும் சந்தேகம் எழுந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
இன்று முதல் வேட்புமனுத் தாக்கல்: 4 நாட்கள் மட்டுமே வாய்ப்பு! தேர்தல் ஆணையம் வைத்த செக்.!
PMK Candidates
logo
Kalki Online
kalkionline.com