யாரையும் நம்பி ஏமாற மாட்டோம்; எங்கள் ஓட்டு எங்கள் உரிமை - விஜய் முன்னிலையில் உறுதிமொழி ஏற்ற தவெக-வினர்..
அதன் பின் பேசிய தவெக தலைவர் விஜய், ஒரு குட்டி க்கதையிலிருந்து ஆரம்பிப்போம்..
ஒரு பெரிய ஊரில் நான்கு ரோடுகள் சந்திக்கும்படியான ஒரு ஆள் நடமாட்டம் இருக்கக் கூடிய ஏரியா .அந்த ஜங்ஷனில் ஒரு முரட்டு ஜல்லிக்கட்டு காளை நின்று கொண்டுள்ளது. சீறிக் கொண்டு இருந்த அந்த காளையின் அருகே யாரும் செல்ல முடியவில்லை. அந்த இடம் நார்மலாக மாற வேண்டும் என்றால் அந்த காளையை அடக்க வேண்டும்.
அந்த ஊரில் இருக்கும் ஒரு சில பேருக்கு மட்டும் தான் காளைஅடங்கும். ஆனால் அந்த நேரம் யாரும் அங்கு இல்லை. அந்த கிரவுண்டில் இருந்த காளையை அடக்க வேண்டும் என்று இருந்த ஒரு சில பேர் 'எங்களுக்கு இல்லாத அனுபவமா நாங்கள் பார்க்காத காளைகளா நாங்கள் பார்க்காத மாடுகளா நாங்கள் போய் அடக்குகிறோம்' என உள்ளே சென்றனர் .ஒருவராலும் அந்த காளையை தொடக்கூட முடியவில்லை. எல்லோரையும் அந்த காளை அடித்துத் தூக்கிப் போட்டது .
இப்பொழுது என்ன செய்யப் போகிறோம் என்று பார்க்கும்போது அந்த கூட்டத்தை விலக்கிக் கொண்டு ஒரு சிறு பையன் ஒரு என்ட்ரி ஒன்று கொடுக்கிறார். 'எங்களாலே முடியல நீ என்னத்த போய் கிழிக்க போகிறாய் என்று ஒரு பக்கம் ஏளனமாகவும் ,பாவம் அந்த காலை கிட்ட போய் அடிபட்டு சாகாதே என்று பரிதாபமாக பேசிய ஒரு பக்கம் இன்னொரு பக்கம் என்று பேச அந்த சின்ன பையன் எதையுமே காதில போட்டுக்காம இரண்டு பாக்கெட்டிலும் கை விட்டுக் கொண்டு ஸ்டைலா கெத்தா அப்படியே உள்ள போறான். ஒரு ஸ்டெப் எடுத்து வைக்கிறான். அந்த காளை சீறிக்கொண்டு வருது. இன்னொரு அடி எடுத்து வைக்கிறான். காளை சீறி கொண்டு முன்னாடி வருது .மக்களெல்லாம் பதட்டத்தோடு அப்படியே பார்த்துட்டு இருக்காங்க .
இன்னொரு ஸ்டெப் எடுத்து வைக்கிறான் காலை அப்படியே முட்ட வரும்போது பாக்கெட்ல மறைத்து வைத்துள்ள இரண்டு புல்லுக்கட்டை எடுத்து காளைகட்ட காமிக்கிறான். காளை சடனா வந்து நின்று அதன் மூடுலாம் மாறி அந்த புல்லுக்கட்டை சாப்பிட ஆரம்பிக்குது. அந்த சின்ன பையன் காளையை தடவி தந்து வயல்வெளியில் கொண்டு போய் மேய விட்டு வருகிறான்.
மக்கள் எல்லோரும் அந்த சிறுவனை ஆச்சரித்துடன் பார்க்கிறார்கள். அடிபட்டு கிடந்த அனுபவஸ்தாலிகள் தலை குனிந்துள்ளனர் .ஒரு பெரியவர் வருகிறார். 'எப்படி இந்த கா ளையை அடக்கினாய்! என்று கேட்டதற்கு அந்த சிறுவன் சொல்கிறான் ' அது கோபமாக இருப்பது போல் தெரியவில்லை அது பசியுடன் இருப்பது போல் தான் தெரிந்தது .அதனால்தான் அந்த புல்லுக்கட்டை சாப்பிட்டு விட்ட நம்மோடு ஜாலியாக வாக்கிங் வந்தது" அந்த பெரியவர் சொன்னார் "இந்த சின்னவங்க பெரியவங்க அனுபவம் இருக்கிறவங்க அனுபவம் இல்லாதவங்க இதெல்லாம் விஷயம் கிடையாது. யாராக இருந்தாலும் அந்த சூழ்நிலைக்கேற்ற மாதிரி என்ன பண்ணி அந்த பிராப்ளத்தை சால்வ் பண்ணுகிறார்கள். அது தான் விஷயமே .அதுதான் மேட்டர். அந்த முரட்டு ஜல்லிக்கட்டு காளை தான் தமிழ்நாடு அரசியல் களம். அந்த பெரியவர் தான் தமிழக மக்கள் .அந்த பாக்கெட் உள்ள ஒருத்தன் சின்ன பையன் வந்தான் பாரு அவன் தான் தமிழ் தமிழக வெற்றி கழகம்..