#JUST IN : வேலூரில் அதிர்ந்த தவெக மேடை! விஜய் பேசிய முழு உரை..!

Thalapathy Vijay
Thalapathy Vijay
Published on

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், வேலூர் அகரம் சேரியில் நடைபெற்ற பிரம்மாண்ட பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். கடந்த முறை சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட வெயில் பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு, இம்முறை தொண்டர்களின் நலனுக்காகப் பிரம்மாண்டமான மேற்கூரை அமைக்கப்பட்டிருந்தது.

வேலூர் கூட்டத்திற்கு 4900 பேர் மட்டுமே அனுமதி என்று சொல்லி இருந்தாலும் அதற்கு மேற்பட்டவர்கள் வந்திருக்க கூடும் என தெரிகிறது.கட்சி க்யூ ஆர் கோடுடன் பாஸ்கள் வழங்கப்பட்டாலும் அவற்றை மீறி போலீசாரின் கட்டுப்பாடுகளை மீறி விஜய் ரசிகர்கள் இந்த கூட்டத்தில் பங்கு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

கட்சி க்யூ ஆர் கோடுடன் பாஸ்கள் வழங்கப்பட்டாலும் அவற்றை மீறி போலீசாரின் கட்டுப்பாடுகளை மீறி விஜய் ரசிகர்கள் இந்த கூட்டத்தில் பங்கு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது ஏற்கனவே வெவ்வேறு ஊர்களில் நடைபெற்ற கூட்டங்களில் நாட்டில் நடைபெறும் பாலாறு உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து விஜய் கோடிட்டு காட்டி உள்ளார். அத்துடன் தற்போதைய ஆட்சியான திமுக மீதான குற்றச்சாட்டுகளின் அதிக அளவில் முன்வைத்து பேசியுள்ளார். இந்த தேர்தலில் மும்முனை போட்டியாக ஏற்கனவே களத்தில் இறக்கம் பழம்பெரும் கட்சிகளான அதிமுக திமுகவுடன் போட்டியிடப் போகும் தவெக மீதான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகம் எழுந்துள்ள நிலையில் இந்த கூட்டத்திலும் திமுக மீதே பல குற்றச்சாட்டுகள் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
#JUST IN : வேலூரில் ஒரு குட்டி கதை சொன்ன விஜய் - ரசிகர்கள் ஆரவாரம்..!
Thalapathy Vijay

சரியாக 12:30 மணிக்கு விஜய் மக்கள் முன் தோன்றினார்.எங்கள் ஓட்டு எங்கள் உரிமை ,எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது, யாரையும் நம்பி ஏமாற மாட்டோம். இது நிஜம் .எங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கே என்ற உறுதிமொழியுடன் ஆரம்பித்தார் விஜய்.

மக்கள் விஜய்யுடன் இருப்பதால் இந்த தேர்தலில் தான் ஒட்டுமொத்தமாக அனைவரும் சேர்ந்து விஜயை எதிர்க்கிறார்கள். நீங்கள் விஜய் நம்புகிறீர்களா ஸ்டாலின் சாரை நம்புகிறீர்களோ ?டிவிகேக்கு போட்டி திமுக தான் என்பது மக்களுக்கும் தெரியும் .அப்படி இருக்க நாங்கள் ஏதாவது பேசினால் வாண்டட் ஆக வந்து வண்டியில் ஏறி அதற்கு கருத்து சொல்கிறேன் என்று காமெடி செய்கிறார்கள்.மக்களை நேசிக்கும் விஜய் வேண்டுமா மக்கள் விரோத ஸ்டாலின் வேண்டுமா ?

ஒரு சீரியசான கேள்வி நீங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன் உங்கள் சொத்து எவ்வளவு? அரசியலுக்கு வந்த பின் உங்கள் சொத்து எவ்வளவு என்று உங்களால் டிக்ளர் பண்ண முடியுமா? இது உண்மையில் நீங்கள் உழைத்து சம்பாதித்த காசா ?அல்லது ஆட்சியில் இருந்தபோது ஆட்டையை போட்ட காசா என்றெல்லாம் ஓபன் ஆக உங்களால் சொல்ல முடியுமா? இதையெல்லாம் கேட்டால் ஊழல்வாதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து நம் மீது பாய்கிறார்கள்.

எனக்கு ஒரு புது ப்ரெண்ட் கிடைத்திருக்கிறார் .அது யார் தெரியுமா நமது முதல்வர் ஸ்டாலின் தான் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கேட்டபோது ஸ்டாலின் எங்களை நண்பர் என்று கூறினார். நாங்கள் உங்களுக்கு நண்பர்கள் தான் என்றால் கரூர் சம்பவத்தில் ஏன் எங்கள் மீது பழியை தூக்கி போட்டீர்கள் ?

உங்கள் ஆட்சி தப்பான ஆட்சி தமிழ்நாட்டுக்கு தேவையில்லாத ஆட்சி. தமிழக வெற்றி கழகத்திற்கு போட்டி திமுக தான் என்பது மக்களுக்கும் தெரியும்.

ஜனநாயகம் என்பது குறித்து 1963-ல் அண்ணா மக்களை முன்னிறுத்தி பேசியது இங்கு பொருத்தமாக இருக்கும் .இதுதான் டி வி கே வின் நிலைப்பாடு இதில் 100% உறுதியாக இருக்கிறோம். மதசார்பற்ற ஆட்சி தான் நமது கொள்கைகளில் ஒன்று .

ஒரு மாதத்துக்கு ஒருமுறை கரண்ட் பில் தருவதாக உறுதிமொழி சொன்னீர்கள் .ஆனால் தந்தீர்களா ?இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தரும்போது 200 யூனிட்டுக்கு மேல் போகும் போது அது யாருக்கு சுமை? மக்களுக்கு தானே .

கிராமங்கள் தோறும் பேருந்துகள் விடப்படும் என்றீர்களே ஆனால் நிறைய மலை கிராமங்களில் பஸ் வசதிகள் இல்லை என்பது தெரிகிறது. அது மட்டுமா? மருத்துவ வசதிகளும் இல்லை இதனால் வீட்டிலேயே பிரசவம் பார்க்கும் ஆபத்துகளும் இருக்கிறது .

"பெண்கள் பாதுகாப்பு முதலிடத்தில் இருப்பதாகக் கூறுகிறீர்கள். ஆனால் பெண்களோ இது 'Safe Model' அல்ல, 'Not Safe Model' என்கிறார்கள். இந்தத் தப்பான ஆட்சியை அகற்ற வேண்டுமென்றால், வரும் தேர்தலில் 'விசில்' பட்டனை அழுத்தி திமுக-வை ஸ்விட்ச் ஆஃப் செய்ய வேண்டும்," என ஆவேசமாகப் பேசினார்.

திமுக கூட்டணியைத் தாக்கிய விஜய், "அறிவாலயம் பக்கத்தில் நிழலுக்கு ஒதுங்குபவர்களைக் கூட ஸ்டாலின் கூட்டணியில் சேர்க்கிறார். கொள்ளையடித்த பணத்தில் பங்கு கொடுத்துக் கட்சிகளைத் தக்கவைக்கிறார்கள்," என்று குற்றம் சாட்டினார்.

இந்தத் தேர்தல் விஜய் vs ஸ்டாலின் என இருவருக்குமிடையே நேரடிப் போட்டியாக அமையப் போகிறது என்பதைத் தனது உரையின் மூலம் அவர் உறுதிப்படுத்தினார்.

விஜய் தேர்தல் வாக்குறுதி :

  • அரசு பள்ளிகள் கல்லூரிகள் தரத்தில் முதல் இடத்தில் இருக்கும் .

  • போதை பொருட்கள் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும்.

  • பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு தவெக ஆட்சியில் நம்பர் ஒன்றாக இருக்கும்.

  • மலை கிராமங்களில் அரசு ஆரம்ப சுகாதாரங்கள் சகல வசதிகளுடன் அமைக்கப்படும்.

  • போட்டித் தேர்வுக்கு ஏற்ற வகையில் பாடத்திட்டம் மாற்றப்படும் .போட்டி தேர்வுக்கு லட்சக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டியது இல்லை.

  • உயர்நிலைக் கல்வியில் அரசியல் சாசனம் தொடர்பான விளக்கங்கள் இருக்கும்.

  • கல்வி நிலையங்களில் கதவுகள் பொருத்தப்பட்ட தரமான கழிவறைகள் அமைக்கப்படும்.

  • மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் கலெக்டர்களின் பணிகளில் பெண்களுக்கு சம பாதி வாய்ப்பு அளிக்கப்படும்.

  • தமிழக வெற்றி கழக ஆட்சியில் பேருந்து வசதியே இல்லாத கிராமங்கள் இருக்காது .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com