

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் கட்சியை தொடங்கிய பின்னர் , முதல்முறையாக இன்று நீலாங்கரை தொகுதியைக்கு உட்பட்ட வாக்கு சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். விஜயின் தமிழக வெற்றி கழகம் சார்பில் மாநிலம் முழுக்க 233 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கட்சி தொடங்கிய பின்னர் விஜய் அரசியலில் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தார்.
இந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர். விஜய் வாக்களிக்க வந்ததால் அந்த வாக்குச்சாவடியில் ஏராளமானோர் திரண்டனர். இதனால், அந்தப்பகுதியில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.