#JUST IN : தவெக தலைவர் விஜயின் 13ம் தேதி பரப்புரையும் ரத்து..!

TVK Vijay
TVK Vijay
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

விஜயின் 13 ஆம் தேதி பரப்புரையும் ரத்து செய்யப்பட்டுள்ளது \. பிரச்சாரத்திற்கு அனுமதி கிடைத்தும் தொடர்ந்து பிரச்சாரங்களை ரத்து செய்து வருகிறார் விஜய்.

கடலூரில் 9ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த பிரச்சாரம் ஒத்திவைக்கப்பட்டு இன்று (11ம் தேதி) நடைபெறுவதாக இருந்தது. திடீரென நேற்று இரவு 11 மணி வாக்கில் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தவெக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. குமரியில் நாளையும், கவரப்பேட்டையில் நாளை மறுநாளும் விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டும் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தாலும் பிரச்சாரங்களை தொடர்ந்து ரத்து செய்து வருகிறார் விஜய். ரத்து செய்வதற்கான காரணங்களையும் வெளியிடாமல் தவெக மௌனம் சாதிக்கிறது. 13ஆம் தேதி அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்ள உள்ள  நிலையில் விஜய் தன்னுடைய  பிரச்சாரத்தை ரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கவரப்பேட்டையில் வரும் 19ஆம் தேதி விஜய் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று தவெக தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. கன்னியாகுமரியை பொறுத்தவரையில் இரண்டு இடங்களில் பொதுக் கூட்டத்திற்கான அனுமதி வேண்டாம் என்றும், ரோட் ஷோ(சாலை வலம் செல்வதற்கு)வாகன பிரச்சாரத்திற்கு மட்டும் தவெக சார்பில் அனுமதி கோரி அதற்கு அனுமதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
#JUST IN: களப்பணியாற்ற வாருங்கள்.! தவெக தலைவர் விஜய் அழைப்பு.!
TVK Vijay
logo
Kalki Online
kalkionline.com