#JUST IN: களப்பணியாற்ற வாருங்கள்.! தவெக தலைவர் விஜய் அழைப்பு.!

TVK Vijay
TVK Vijay
Updated on

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற இருக்கும் சூழலில், களப்பணியாற்ற தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் தவெக விஜய். அரசியல் பிரச்சாரங்களை தீவிரப்படுத்தி வரும் விஜய், தமிழ்நாடு முழுக்க பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

இன்று கடலூரில் நடைபெற இருந்த பரப்புரையை தவெக தலைமை ரத்து செய்த நிலையில், தொண்டர்கள் வாக்கு சேகரிக்க முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் விஜய்.

இதையும் படியுங்கள்:
#BIG NEWS: ஆன்லைன் மோசடிக்கு செக்: ₹10,000-க்கு மேல் அனுப்பினால் உடனே போகாது.!
TVK Vijay

தவெக தலைவர் விஜய் கூறுகையில், “தவெக நிர்வாகிகள் மட்டுமின்றி, தொண்டர்களும் காலை மற்றும் மாலை என தொடர்ந்து மக்களை நேரடியாக சந்தித்து பிரச்சினைகளை கேட்டறிய வேண்டும். வாக்குகளை சேகரிக்க வேண்டும்.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும். மேலும் தன்னார்வலர்களும் தவெக-வுக்காக களப்பணியாற்ற முன்வர வேண்டும்” என விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளை தன்னார்வலர்களாக பயன்படுத்த வேண்டும் என நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது களப்பணியாற்ற தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் விஜய்.

இதையும் படியுங்கள்:
#JUST IN: வீடு தேடி வரும் பூத் ஸ்லிப்! தேர்தல் ஆணையத்தின் மெகா அப்டேட்.!
TVK Vijay
logo
Kalki Online
kalkionline.com