.png?w=480&auto=format%2Ccompress&fit=max)
.png?w=480&auto=format%2Ccompress&fit=max)
ஜனநாயகன் திரைப்படத்திற்கான யு/ஏ சான்றிதழ் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பு வாசிப்பில் வெளிநாட்டு சக்திகள் இந்தியாவில் மதப் பிரச்சனையை ஏற்படுத்தும் காட்சிகள் , வசனம் ஜனநாயகம் படத்தில் உள்ளது என நீதிபதிகள் கருத்து..ஜனநாயகன் வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டது நீதிமன்றம்.
இதற்கு முன் ஜனவரி 20 ந்தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ் வழக்கில் பல்வேறு விவாதங்கள் இருதரப்பிலும் முன்வைக்கப்பட்ட போது விதிகளை ஆய்வு செய்த அடிப்படையில் தான் தனி நீதிபதி தீர்ப்பளித்தார் என படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்ததும் மறுதணிக்கை எனும் தகவல் மட்டுமே ரத்து என்றால் ஜனநாயகனுக்கு சான்றிதழ் வழங்குமாறு எப்படி கூற முடியும்? எனவும் இந்த வழக்கில் கவனமாக கால நேரம் எடுத்துக் கொண்டு தனி நீதிபதி விசாரித்து இருக்கலாம் எனவும் சென்சார் போர்டுக்கு ஒரு நாள் அவகாசம் கொடுத்திருந்தால் கூட தனி நீதிபதி விசாரணை கேள்விக்குள்ளாகி இருக்காது என்ற தலைமை நீதிபதியின் கருத்தும் கவனிக்கத்தக்கது. மேலும் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைத்த நிலையில் இன்று இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.
தணிக்கை வாரியத்துக்கு போதுமான கால அவகாசம் வழங்கவில்லை எனவும் ஆகவே ஜனநாயகன் பட வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரணை நடத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். தணிக்கை வாரியத்தின் வாதம் இந்த தீர்ப்பின் மூலம் ஏற்கப்பட்டுள்ளது என என்ற கருத்து இதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.
ஜனநாயகனுக்கு யு ஏ சான்றிதழ் வழங்க பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான தணிக்கை வாரியத்தின் மேல் முறையீட்டு வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம் எம் ஸ்ரீ வஸ்தவா மற்றும் அருள் முருகன் அமர்வு இந்த தீர்ப்பு வழங்கியது
தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்தும், சென்சார் போர்டு மேல் முறையீட்டை ஏற்றும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.சென்சார் போர்டு பதில் மனு தாக்கல் செய்வதற்கு தனி நீதிபதி அவகாசம் அளித்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மீண்டும் தனி நீதிபதி வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். படத்தின் தயாரிப்பாளர், தன் முறையீட்டு விண்ணப்பத்தில் திருத்தம் செய்து கொள்வதற்கும் நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.
இதனால் படம் வெளியாவதில் சிக்கல் தொடர்கிறது.