விஜயின் லியோ  5 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ள  "பிளடி ஸ்வீட் " ப்ரொமோ வீடியோ !

விஜயின் லியோ 5 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ள "பிளடி ஸ்வீட் " ப்ரொமோ வீடியோ !

தளபதி விஜயின் லியோ படத்தின் "பிளடி ஸ்வீட் " ப்ரொமோ வீடியோ தற்போது 5 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளதால் விஜய் ரசிகர்கள் மற்றும் லியோ படக்குழுவினர் படு உற்சாகத்தில் உள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் விஜய்யின் 67வது படத்திற்கு லியோ எனப் பெயரிட்டு டைட்டில் ப்ரொமோவை வெளியிட்டிருந்தது படக்குழு. லியோ டைட்டில் ப்ரொமோவெளியான 18 மணி நேரத்தில் 13 மில்லியன் பார்வைகளைக் கடந்தது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் நேரடியாக வெளியாகிறது. இதனால் இந்தப் படம் பான் இந்தியா படமாக வெளிவர உள்ளது தெரிகிறது.

ப்ரோமோவில் விஜய் ஒரு சாக்லேட் ஃபேக்டரி வைத்திருப்பது போலவும், அவரைத் தேடி மிகப்பெரிய கேங் ஒன்று வருவது போலவும் காட்சிகள் இருந்தன. 2 நிமிடம் 48 நொடிகள் நீளமிருக்கும் இந்த டைட்டில் ப்ரொமோ முழுவதும் நடிகர் விஜய் மட்டுமே வருகிறார்.

தேர்ந்தெடுத்த சாக்லெட் கொட்டைகளில் இருந்து விஜய் சாக்லேட் தயாரிப்பது போல ஒரு காட்சி அமைப்பும், மறுபுறம் இரும்பை காய்ச்சி அதிலிருந்து வாளை தயாரிப்பது போல காட்சி அமைப்பும் தனித்தனியாக வருகிறது. இறுதியாக தான் தயாரித்த சாக்லேட்டை வைத்து வாளின் சூட்டை தணிப்பது போல காட்சிகள் ப்ரொமோவில் இடம்பெற்றுள்ளன.

இறுதியாக வாளில் இருக்கும் சாக்லேட்டை சுவைத்துப் பார்த்து நடிகர் விஜய், ‘பிளடி ஸ்வீட்’ என்ற வசனத்தைப் பேசுகிறார்.

இந்த ப்ரொமோ வெளியானதில் இருந்து தற்போது வரை 5 கோடி பார்வையாளர்களைக் யுட்யூப் தளத்தில் பெற்றுள்ளது.

அதைத் தொடர்ந்து படக்குழுவினர் காஷ்மீருக்கு முதல்கட்ட படப்பிடிப்பிற்காக புறப்பட்டுச் சென்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின.

தற்போது லியோ ப்ரொமோ வீடியோ தற்போது 5 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மற்றும் லியோ படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com