திருச்சியில் பரபரப்பு..! முதலமைச்சர் விஜய் வேனில் இருந்து கீழே விழுந்த காவலாளி..!!

VIJAY'S SECURITY GUARD FALLS
VIJAY'S SECURITY GUARD FALLS source : twitter
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

முதலமைச்சர் விஜய் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த திருச்சி கிழக்குத் தொகுதி பொதுமக்களுக்கு நேரில் நன்றி தெரிவிக்கவுள்ளார். அதன்படி, இன்று (ஜூன் 1) மாலை 4 மணியளவில் தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார்.திருச்சிக்கு வந்த முதல்வர் விஜய்க்கு, காவல்துறையினர் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில், ம.தி.மு.க எம்.பி., துரை வைகோ வரவேற்பு அளித்துள்ளார்.

திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற விஜய் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக திருச்சி சென்றுள்ளார். அங்கு சாலையில் முதல்வர் விஜய்க்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இன்னும் சற்று நேரத்தில் முதல்வர் விஜய் விழா நடக்கும் இடத்திற்கு சென்றைடைவார்.இந்நிலையில் சற்று முன் முதலமைச்சர் விஜய் பயணித்த பிரச்சார வேனில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவர் திடீரென கீழே விழுந்தார். இதைக் கண்டு முதலமைச்சர் விஜய் அதிர்ச்சியடைந்து உடனடியாக வாகனத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சக காவலர்கள் விரைந்து சென்று அவரை மீட்டனர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

logo
Kalki Online
kalkionline.com