அமேசானில் தவெக காம்போ கிட்! கொடி முதல் தங்க முலாம் பூசப்பட்ட பேட்ஜ் வரை - தொண்டர்கள் உற்சாகம்..!!

tvk combo kit
tvk combo kit
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

அமேசான் தளத்தில் தமிழக வெற்றிக் கழகம்(தவெக) ஆதரவாளர்களுக்காக பிரத்யேகமான காம்போ கிட் விற்பனைக்கு வந்துள்ளது.

அமேசான் தளத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின்(TVK) கொடி, ஸ்டிக்கர்கள், விசில் கீ செயின், ரிப்பன் பேட்ஜ், கை பேண்ட் போன்ற பொருட்கள் அடங்கியTVK Combo Kit ஆஃபர் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காம்போ கிட் சமூக ஊடகங்களில் கவனம் பெற்று வரும் நிலையில், தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இதற்கு அதிக வரவேற்பை பெற்று தந்துள்ளது.

ரூபாய் 699 சலுகை விலையில்(இதன் அசல் விலை 999 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது) விசில் கீ செயின், ரிப்பன் பேட்ஜ், விஜய் ஸ்டிக்கர், தவெக கட்சிக் கொடி, கை பேண்ட் போன்றவை விற்பனைக்கு வந்துள்ளது. 18K தங்கமுலாம் பூசப்பட்ட பேட்ஜ்கள், வாட்டர் ப்ரூஃப் ஸ்டிக்கர்கள் போன்றவையும் அமோகமாக விற்பனை ஆகிறது. இதனை தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆன்லைனில் வாங்கி வருகின்றனர். சில இடங்களுக்கு அருகிலேயே பொருட்களை வாங்குவதற்கான whatsapp எண்களும் பகிரப்படுகின்றன.

தவெக காம்போ கிட்டில் உள்ள பொருட்கள்:

  • கட்சிக்கொடி

  • விசில் கீ செயின்

  • ரிப்பன் பேட்ஜ்

  • விஜய் ஸ்டிக்கர்

  • கட்சி துண்டு/Muffler

  • கை பேண்ட்(Hand Band)

இவை அனைத்தும் ஒரு பிரத்தியேகமான மல்டிகலர் பிரிண்டட் பாக்ஸில் பேக் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. கட்சி மாநாடுகள், ஊர்வலங்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு வழங்குவதற்காக பயனுள்ள தொகுப்பாக உள்ளது.

மற்றொரு கிட் ரூ1,199 விலையில் கிடைக்கிறது. இதில் மேலே உள்ள பொருட்களுடன் கூடுதலாக மெம்பர்ஷிப் கார்டு மற்றும் கட்-அவுட் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

இதையும் படியுங்கள்:
விஜய்யை பார்க்க சென்ற போது விபத்து: முழு மருத்துவ செலவையும் ஏற்றார் அமைச்சர் அன்பில் மகேஷ்!
tvk combo kit
logo
Kalki Online
kalkionline.com