பணிப்பெண் இல்லத் திருமணத்தில் விக்ரம்!

பணிப்பெண் இல்லத் திருமணத்தில் விக்ரம்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

–லதானந்த்

நடிகர் சீயான் விக்ரம் தனது வீட்டில் நாற்பது வருடங்களுக்கு மேலாகப் பணியாற்றி வரும் பணிப்பெண் மேரியின் இல்லத் திருமணத்தில் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.

விக்ரம் தன்னுடன் பணியாற்றும் சக  ஊழியர்களின் குடும்பத்தில் நடைபெறும் சுப வைபங்களிலும் கலந்துகொள்வது வழக்கம்.அந்த வகையில் விக்ரமின் வீட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி மறைந்த  ஒளிமாறன் என்பவரது மனைவியான மேரி கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக விக்ரம் வீட்டில் பணியாற்றி வருகிறார்.

மேரியின் மகன் தீபக் என்பவருக்கும், மணமகள் வர்ஷினிக்கும் திருப்போரூர் கந்தசாமி ஆலயத்தில் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் வைபவத்தில் நடிகர் விக்ரம் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.

விக்ரமின் ரசிகர்களும், ரசிகர் மன்ற நிர்வாகிகளும் உடனிருந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.