விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ ஜாமீன் மனு : இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணை!

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ
விளாத்திகுளம் திமுக எம்எல்ஏSource:hindu
Updated on

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமீன் கோரிய மனு பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது. சமீபத்தில் கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் தமிழக முதலமைச்சர் குறித்தும், தவெக கட்சியின் தலைவரான விஜய் குறித்து சில கருத்துகளை தெரிவித்திருந்தார். இது சர்ச்சையான நிலையில் தான் தூத்துக்குடி தவெக வடக்கு மாவட்ட செயலாளர் கொடுத்த புகாரின் அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட தற்போது அவர் ஜெயிலில் உள்ளார். ஏற்கனவே தாக்கல் செய்த ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி இளந்திரையன் முன்பு அவர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி தற்போது ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்திருந்தார். ஏற்கனவே காவல்துறையினர் உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் கைது செய்துள்ளதாகவும் அவரை விடுவிக்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும், அத்துடன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறி இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்த வழக்கை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ஜி. வி. மார்க்கண்டேயன். இவர் கோவில்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து கடந்த 20ஆம் தேதி இது தொடர்பாக மார்க்கண்டேயனை கைது செய்தனர். பின்னர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் சுமார் 11 மணி நேர விசாரணைக்குப் பிறகு அவரை இரவில் தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மார்கண்டேயன் எம்.எல்.ஏ-வை அடுத்த மாதம் அதாவது ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதனால் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ தரப்பு வக்கீல்கள் ஜாமீன் கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று காலை நடைபெறுவதாக இருந்த சமயத்தில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மார்க்கண்டேயன் எம் எல் ஏ வை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்தனர்.

court order
court orderimage credit-istockphoto.com

இதனால் இந்த 2 மனுக்கள் மீதும் விசாரணை நேற்று மதியம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மார்க்கண்டேயன் எம் எல் ஏ தூத்துக்குடி முதலாவது ஜூடீசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நீதிபதி சுமதி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது குற்றங்களின் தீவிரத் தன்மை மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் சாட்சியங்களை சிதைப்பதற்கான சாத்தியக்கூறு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஜாமீனை தள்ளுபடி செய்து நீதிபதி சுமதி உத்தரவிட்டார். அத்துடன் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு போலீசார் தாக்கல் செய்திருந்த அனுமதி மனுவையும் தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில் தான் சிறையில் அடைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரியும், அவதூறு வழக்கில் ஜாமீன் கோரியும் மார்க்கண்டேயன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி நீதிபதி முன்பு முறையிடப்பட்டது. மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
செந்தில்பாலாஜிக்கு பின்னடைவு:காவல்துறையினர் துன்புறுத்த கூடாது என்று தாக்கல் செய்த மனு தள்ளுபடி!
விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ
logo
Kalki Online
kalkionline.com