10ம் வகுப்பு படித்திருந்தால் போதும்..! திருவண்ணாமலையில் 103 கிராம உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு!

Jobs
Job Opportunities
Published on

கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் : வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

வகை : தமிழ்நாடு அரசு வேலை

காலியிடங்கள் : 103

பணியிடம் : திருவண்ணாமலை

ஆரம்ப தேதி : 10.07.2025

கடைசி தேதி : 09.08.2025

பணியின் பெயர்: கிராம உதவியாளர்

சம்பளம்: மாதம் Rs.11,100 முதல் Rs.35,100 வரை

காலியிடங்கள்: 103

தாலுகா வாரியாக காலியிடங்கள் எண்ணிக்கை:

  • திருவண்ணாமலை – 09

  • போளூர் – 03

  • செங்கம் – 01

  • செய்யார் – 04

  • ஆரணி – 17

  • வந்தவாசி – 09

  • தண்டாரம்பட்டு – 06

  • கலசம்பாக்கம் – 07

  • சேத்துப்பட்டு – 15

  • வேம்பாக்கம் – 09

  • கீழ்பெண்ணாத்தூர் – 13

  • ஜவ்வாது மலை – 10

கல்வி தகுதி: 10ம் வகுப்பு

இதையும் படியுங்கள்:
சேலம் மக்களுக்கு குட் நியூஸ்! 105 கிராம உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு... தகுதி: 10ம் வகுப்பு!
Jobs

இதர தகுதிகள்: விண்ணப்பதாரர் அந்த வட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

தமிழில் பிழையின்றி எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட வட்டத்தை சேர்ந்தவர்களாகவும் அதே வட்டத்தில் நிரந்தரமாக வசித்து வருவதாகவும் இருக்க வேண்டும்.

காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அக்கிராம பணியிடத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது வரம்பு:

BC, BC (M), MBC/DNC, SC, SC(A), ST – 21 வயது நிரம்பியவராகவும் 37 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளி – 21 வயது நிரம்பியவராகவும் 42 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

இதர வகுப்பினர் – 21 வயது நிரம்பியவராகவும் 32 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

மிதிவண்டி /இருசக்கர வாகனம் ஓட்டும் திறன், வாசித்தல் மற்றும் எழுதும் திறன்

நேர்காணல்

சான்றிதழ் சரிபார்ப்பு

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.07.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.08.2025

இதையும் படியுங்கள்:
BCA அல்லது BSC படித்தவரா நீங்கள்..? விப்ரோவில் சேர ஓர் அரிய வாய்ப்பு…!
Jobs

எழுத்து தேர்வு தேதி: 08.09.2025 முதல் 14.09.2025 வரை

நேர்காணல் நடைபெறும் தேதி: 15.09.2025 முதல் 23.09.2025 வரை

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பப்படிவம் மற்றும் நிபந்தனைகளை https://tiruvannamalai.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com